Articles

  • சம்மாந்துறைக்கென புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம்.
    ஒவ்வொரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் கீழ் மாவட்ட பொலீஸ் பிரிவு காணப்படும். அந்த வகையில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவானது கல்முனை உதவி மாவட்ட காரியாலயத்தின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்தது. இதனை தொடர்ந்து அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரிவுகள் உருவாக்கப்பட்டதன் பின் தற்போது சம்மாந்துறையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதிகாரி காரியாலயம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. செனவிரட்ன அவர்களின் தலைமையில் நேற்று […]
  • சம்மாந்துறை MOH பிரிவில் கொவிட் வக்சின் ஏற்றும் பணிகள்
    சம்மாந்துறை MOH பிரிவில் கொவிட் வக்சின் ஏற்றும் பணிகள் இன்று 24.07.2021 ஆரம்பிக்கப்படுகின்றது.. இன்றைய தினம்.., ஆசிரியர்களுக்கு அல் மர்ஜான் கல்லூரியிலும்.. 60 வயதுக்கு மேற்பட்டோர், பாலூட்டும்+கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலும்.. 30 வயதுக்கு மேற்பட்டோர், முப்படையினர், இதர அரச உத்தியோகத்தர்களுக்கு நகர மண்டபத்திலும் .. COVID வக்சின் ஏற்றப்படும் என சம்மாந்துறை MOH அறிவித்துள்ளது.
  • மருத்துவ துறையில் சம்மாந்துறையில் MD பட்டம்
    பொதுவாக மருத்துவ துறையில் special முடிப்பவர்களை MD பட்டம் கிடைத்ததாக சொல்வார்கள். சம்மாந்துறையில் நான் அறிந்து முதலாவது MD முடித்தவர் Dr M.S. Ibra Lebbe (Consultant Community Physician), அதன் பின்னர் பலர் Eg: Dr. Faseena ( MD in Paediatrics – Consultant paediatrician) Dr. I.L.M.Safeer ( MD in Paediatrics – Consultant paediatrician & community paediatrics) Dr. Asfir (MD in Critical Care Medicine) Dr. […]
  • இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள்.
    இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள். +++===+++by:ajki===+++===+++ 2ம் உலக போரின் போது வாழ்ந்தவர்கள் போலியோ காலத்தில் வாழ்ந்தவர்கள் 79ம் ஆண்டு சூறாவளின் போது வாழ்ந்தவர்கள். ஜூலை கலவரத்தில் வாழ்ந்தவர்கள் JVP கலவரத்தில் வாழ்ந்தவர்கள் யுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இன பிரச்சனையின் போது வாழ்ந்தவர்கள் சுனாமியின் போது வாழ்ந்தவர்கள் வெள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்று கொறோனா காலத்தில் வாழ்பவர்கள் !!! நம்பிக்கையே வெற்றியின் ரகசியம் !!!   
  • உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு
    ஊர் மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (26.03.2020) சிறப்பாக இடம்பெற்றது. நாட்டின்அனைவரினது மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட் -19 எனும் ( கொரோனா) தொற்று நோயினால் நாளுக்கு நாள் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் உயிர் சேதங்கள் இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் […]
  • சம்மாந்துறையில் COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு
    COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைக்கு SWUA க்கு எனது மனமார்ந்த நன்றி அனைத்து சமூக அமைப்புகளும் இதேபோன்ற செயல்களைத் தொடங்க வேண்டும். சம்மாந்துறையில் SWUA அமைப்பினால் வெற்றிகரமாக நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி !! முழு உலகையும் காவு கொண்டு தற்சமயம் இலங்கையையும் காவு கொண்டுவரும் கொடிய கொரோனா எனப்படும் வைரஸ் தொற்றிலிருந்து சம்மாந்துறை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தினால் (SWUA) கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று […]
  • முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.
    சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்டடார், அவர் இன்று 23.03.2020 ம் திகதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அங்கொடை  IDH வைத்தியசாலையிலிருந்து  அவர் இன்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து.
    கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து… முப்தி யூஸுப் ஹனிபா ——————————————————– வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு. இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாது.இங்கிலாந்திலிருந்து நேரடியாக ரன்தம்பே கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து வரப்படுவோம் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எதிர்வரும் 14 நாட்கள் இந்த முகாம் வாழ்க்கை புதிய அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது.எதுவும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை. நானும் சகோதரர் ஹிஷாமும் ஏற்கனவே திட்டமிட்டமிட்டிருந்ததன் அடிப்படையில் […]
  • ஊரடங்கு சட்டம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
    ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வெளியில் செல்வது தொடர்பில் என்ன நிலைப்பாடு என்பது தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக காணப்படுகின்றது. நாட்டின் இறைமயைப் பாதிக்கும் ஒரு இக்கட்டான நிலை உருவாகின்ற போது அந்த நாடு அவசர கால நிலையை பிரகடனம் செய்யும். அந்த வகையில் இன்று நாட்டு சுகாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக இருப்பதால் அரசாங்கம் அவசர கால […]
  • சம்மாந்துறையில் இன்று
    இன்று 20.03.2020 மாலை 06 மணிமுதல்  திங்கட்கிழமை (23) காலை 06 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக சந்தைகளில் அலை மோதினர். இதன் போது எடுக்கப்பட்ட படங்கள்.
  • மன்சூரின் வேட்புமனு கையளிப்பு.
    இன்று காலை, திகாமடுல்ல மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி வேட்பாளர் முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனுவினை கையளிப்பதற்கு முன்னர் தனது அலுவலகத்தில் துவா பிரார்த்தனைகளுடன்.
  • மாஹிர் அவர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.
    அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சம்மாந்துறைத் தொகுதி வேட்பாளராக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ எல் எம் மாஹிர் அவர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  
  • வேட்புமனு தாக்கல் 2020
    தேசிய காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் அதாஉல்லா தலைமையின் கீழ் பின்வரும் உறுப்பினர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 1.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி . எஸ்.எம்.எம் இஸ்மாயில் – சம்மாந்துறை 2.ஏ.எல்.எம்.சலீம் (நிருவாக சேவை உத்தியோகத்தர்) – சாய்ந்தமருது . 3.எஸ்.எம்.என்.மர்ஷும் மெளலானா (சடட்டத்தரணி) – நிந்தவூர் . 4. அலறி றிபாஸ் (சட்டத்தரணி) – மருதமுனை . 5. பழீல் பீ.ஏ – அட்டாளைச்சேனை . 6. முகம்மட் ஷரீப் […]
  • வரலாற்றில் முதல் முறை ஜும்மாஹ் தொழுகை இல்லை.
    2019 டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரானா வைரஸ் [கோவிட்19] பரவலின் வெளிப்பாடாக உலகில் இதுவரை [20.03.2020]  246,467 மக்களை பீடித்து உள்ளதுடன் அது 10,049 மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இலங்கையில் அதன் தாக்கம் உருவானது இது இன்று [20.03.2020] ம் திகதியுடன் 70 நபர்களை இலங்கையில் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் அனைத்தும் அரசினால் தடை செய்யப்பட்டது. அந்த வகையில் முஸ்லிம் பள்ளிவாயல்கள் அனைத்தும் மூடப்பட்டு தொழுகைகளை வீட்டில் […]
  • புதிய பிரதி தவிசாளர்
    சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளராக எ.அச்சு முகம்மட் (நைப்F) தெரிவு. சம்மாந்துறையின் புதிய உபதவிசாளராக ஸ்ரீ ல.சு.கட்சியின் அமைப்பாளர்,பிரதேச சபை உறுப்பினர் எ.அச்சு முகம்மட் (நைப்F) தெரிவாகியுள்ளார். வாழ்த்துக்கள் 🎊……
  • நிலநடுக்கம்.
    லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.  பூமியின் மேற்புறப் பாறை […]
  • சம்மாந்துறை சுதந்திர தின கொண்டாட்டம்
    72வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று 04.02.2020 சம்மாந்துறை பிரதேச சபை, சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் கலை கலாச்சார அமைப்புக்கள் போன்ற வற்றின் ஏற்பாட்டில் அப்துல் மஜீத் மண்டபத்தில் நடை பெற்றது. இதன் போது சம்மாந்துறை  பிரதேச சபை தவிசாளர் , அதன் உறுப்பினர்கள் , ஊழியர்கள் சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் A.J. காமில் இம்டாட் , அதன் உறுப்பினர்கள் , சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் […]
  • ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது எது?
    ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அதன் கல்வி கற்றோர் எண்ணிக்கையிலோ அல்லது எத்துனை காபட் விதிகளை இட்டோம் என்பதிலோ அல்லது எத்துனை கட்டடங்கள் உள்ளது என்பதிலோ மட்டும் அல்ல மாறாக அதன் ஒழுக்க விழுமியங்களிலும் தங்கி இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது!!! இந்த புகைப்படத்தினை சற்றே பாருங்கள் இது நமது பிரதேசத்தினை சேர்ந்த வயல் வெளியும் அதற்கு நீர் வழங்கும் வடிகாலுமே!!! மனதினை கனமாக்கும் இந்த காட்சியும் நிலையம் நமது வீட்டிலும் / நமது அண்டை […]
  • இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை சான்றிதழ் வளங்கும் நிகழ்வு 2019
    சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்த முதலுதவி பயிற்சிப் பட்டறை கடந்த [03.11.2019] நடைபெற்றது, இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. இன்று 19.11.2019 செவ்வாய் கிழமை. பி.ப 03:45 மணிக்கு சம்மாந்துறை GAFSO காரியாலயத்தில் இடம்பெற்றது. சம்மேளன சுகாதார பிரிவின் தலைவர் வைத்தியர் ILM. ரிஸ்வான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார பிரிவு செயலாளர் AMM. அஸ்கி அவர்ளின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விரிந்தினராக சம்மேழன தலைவர் […]
  • இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019
    எமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப் பட்டறை.சம்மாந்துறை தாருல் ஹஸனாத் கலாசாலையில் (சின்னப்பள்ளி மதரஸா), மிக விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிராந்தியத்தில் இருந்து சுமார் 130 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். காலம்: 03.11.2019 நேரம்: 8.30 a.m. – 12.30 pm இந்நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகளின் சம்மேளன சுகாதார பிரிவின் செயலாளர் AMM. அஸ்கி அவர்களுடைய ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வளவாளராக சம்மேளன சுகாதார பிரிவு […]
  • இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019
    இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019 எமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப்பட்டறை தொடர்பான விபரங்கள். நடை பெறும் இடம்: தாருல் ஹஸனாத் (சின்னப்பள்ளி மதரஸா), சம்மாந்துறை காலம்: 03.11.2019 நேரம்: 8.30 a.m. – 12.30 pm காலை 8.30 – 8.50 மணிக்கு மீள் பதிவுகள், சான்றிதழ்களுக்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று அச்சுக்கு அனுப்பப்படும். சான்றிதழ்கள் அச்சடிக்கப்படும் முன்பு சமூகம் தருபவர்களுக்கே சான்றிதழ் கிடைக்கும். 9.00 மணிக்கு […]
  • “பொசன்” அன்னதானம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறையில்.
    (15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற […]
  • போதைப்பொருள் ஒழிப்பும் சிறுவர் நன்னடத்தையும்!
    போதைப்பொருள் ஒழிப்பும் சிறுவர் நன்னடத்தையும்! இன்ஷா அல்லாஹ்! எமது (RFA) ரிபாத் நண்பர்கள் ஒன்றியத்தால் எதிர்வரும் 2019.02.19 செவ்வாய் கிழமை காலை 9.00 மணியளவில் சம்மாந்துறை அல்-மதீனா வித்தியாலயத்தில் போதைப்பொருள் ஒழிப்பும் சிறுவர் நன்னடத்தையும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. எனவே அனைவரையும் இக்கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
  • பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழு அமைத்தலும் பயிற்சி பட்டறையும் (2018/11/22)
    சம்மாந்துறை பிரதேச செயலக ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் பங்களிப்புடன் பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழு அமைத்தலும் பயிற்சி பட்டறையும் இன்று 2018-11-22 ம் திகதி தாருள் ஹசனாத் கலா பீடத்தில் நடை பெற்றது. இதன் போது சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஜனாப். MM. ஆசிக், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஜனாப். பெரோஸ் , சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் தலைவர் ஜனாப். காமில் இம்டாட், செயலார் இஷாக், அனர்த்த […]
  • அழைப்பிதழ் – பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழு அமைத்தலும் பயிற்சி பட்டறையும்
  • சம்மேளனத்தின் பெயர் மாற்றம்
    நமது சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம், அமைச்சின் தேசிய செயலக கடிதத்தின் பிரகாரம், சிவில் சமூக அமைப்புகளின் பிரதேச சம்மேளனம் – சம்மாந்துறை என பெயர் மாற்றப்பட்டுள்ளது சம்மேளனம் பற்றி அறிந்து கொள்ள – https://www.sammanthurai.org/federation/
  • வறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம்
    சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் இவ்வருட ஆரம்பத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ITF அமைப்பு, சம்மேளனம், கணவந்தர்களின் நிதியுதவியுடன் கடந்த 2018.08.24 ம் திகதி அதன் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தலைவர் A.J. காமில் இம்டாட், அதன் உப தலைவர் A.L.M. யாசீன், சம்மேளனத்தின் வாழ்வாதார குழு தலைவர் M.M.I. சியாத், சம்மேளனத்தின் சிறுவர் அபிவிருத்தி குழு தலைவர் M.M. வாகிட், அதன் செயலாளர் M.I.M. […]
  • புகைத்தல் போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறை
    புகைத்தல் போதைப்பொருள் பாவனையற்ற சம்மாந்துறை எனும் தொனிப்பொருளில் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஊரில் உள்ள ஏனைய அமைப்புகள் இணைந்து இன்று 2018.07.28ம் திகதி மாபெரும் பேரணி நடைபெற்றது.
  • இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறல்
    Eid Mubarak வாழ்த்து செய்தி மூலம் பல கோடி ரூபாக்கள் வீண் விரயம் செய்யப்படுவதை தடுப்போம் !!! ஒருவருக்கு ஒருவர் சலாம் சொல்லுவதும் வாழ்த்துக்கள் பரிமாறுவது கட்டாயாமான ஒன்று அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை !!! இருந்த போதிலும் அதனை செயல் விளைவுடையதாக செய்வதன் மூலம் பல கோடிகள் வீண் விரயமாக்கப்படாமல் சேமிக்க முடியும் !!! இந்த பணத்தை ஸதக்கா செய்வதினால் நன்மையும் பெற்று கொள்ளலாம். நாம் Eid Mubarak வாழ்த்துக்களை WhatsApp மூலம் அனுப்பும்போது போட்டோவாக அல்லது […]
  • அழிக்கப்பட எவ்வளவு நேரம் ஆகும்?
    ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய விடயம் … குறிப்பாக சமூக ஆவலர்கள் 👇🏿 How long does it take to decompose ? #plastic# #pollution# #gogreen# Paper Towel – 2-4 weeks Banana Peel – 3-4 weeks Paper Bag – 1 month Newspaper – 1.5 months Apple Core – 2 months Cardboard – 2 months Cotton Glove – 3 months Orange […]
  • சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் மூன்றாவது ஒன்று கூடல்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் மூன்றாவது ஒன்று கூடல் இன்று 3/06/2018 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை Olive Restaurant இல் காலை 10    மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சம்மேளனத்தின் தலைவர் கௌரவ Kamil Imdad, கௌரவ செயலாளர் Ishak அவர்களும் கலந்து கொண்டார். மத அநுஷ்டானத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  சுகாதாரப் பிரிவின் செயலாளர் கௌரவ அஸ்கி அவர்கள் கடந்த கூட்ட கூட்டறிக்கையை வாசித்து முன்மொழிவுகளையும் வழிமொழிகளையும் பெற்று […]
  • சம்மேளன மாதாந்த கூட்டம் – 2018-05-27
    நமது சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன மாதாந்த கூட்டம் கடந்த 2018.05.27 ம் திகதி நடைபெற்றது. இதன் போது பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊரின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்யும் பல முக்கிய செயற்பாடுகள் சம்மந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறிப்பாக : ஒழுங்கு படுத்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் சம்மந்தமான முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கை கலந்துரையாடப்பட்டது. வசதி குறைந்த மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் தாயரிக்கப்பட்டது. சுத்தமான குடிநீர் திட்டம். அடிப்படை மலசல கூட […]
  • ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு
    குடிநீர் 💦💧 வசதி தேவைப்படும் ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக்கொடுக்க சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் தயாராக உள்ளது. தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் 📞0777565619
  • உலர் உணவு பொருட்கள் வழங்கல்
    சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தினால் இன்று 2018.05.18 ம் திகதி ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் (பொதிகள்) வறுமை கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்கு பங்களிப்பு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் பாலிப்பானாக… ஆமீன் .
  • மனித பப்பிலோமா (HPV) வைரஸ் தடுப்பூசி
    மனித பப்பிலோமா (HPV) வைரஸ் தடுப்பூசி…. பெற்றோருக்கான தகவல் குறிப்பு….. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின்கீழ் கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் வருமுன் காப்பதற்கான மனிதப் பப்பிலோம்னா வைரஸ் (HPV) தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பை கழுத்துப்புற்றுநோய் 2ஆவது இடத்தில் உள்ளது.இலங்கையில் வருடாந்தம் 850 – 950 பெண்கள் கருப்பை கழுத்துப்புற்றுநோய் முற்றிய நிலையில் இனங்காணப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதுடன் மிகக்குறுகிய காலத்தினுள் இறந்துவிடுகின்றனர். […]
  • சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் இரண்டாவது அமர்வு
    சம்மாந்துறையின் சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் இரண்டாவது ஒன்று கூடல் இன்று (28/04/2018)  காலை 9.30 மணியளவில் சம்மாந்துறை Olive Restaurant ல் சுகாதாரப் பிரிவின் தலைவர் Dr.Rizwan தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் Kamil Imdad கலந்து கொண்டார்கள். மார்க்க அனுஷ்டானங்களுடன் ஒன்று கூடல் ஆரம்பிக்கப்பட்டு வரவேற்புரையுடன் தலைமையுரையை சுகாதாரப் பிரிவின் தலைவர் Dr Rizwan நிகழ்தினார். அவர் கூறுகையில் மக்கள் சுகாதாரம் சம்மந்தமாக […]
  • BCG தடுப்பூசி
    BCG தடுப்பூசி பிறந்த குழந்தைகளுக்கு போடலாமா??? BCG தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடும் போது குழந்தைகளுக்கு காச நோய்( TB) வருகின்றது. இது உண்மையா??? Bacillus Calmette–Guérin (BCG) Vaccine  தடுப்பூசியைப் பற்றி நமது சமூகத்தில் பரப்பப்படும் செய்திகளால் தடுக்கப்பட முடியுமான நோய்களால் பெரும் சமூகப் பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று பயம் தற்போது எம் மத்தியில் எழுகின்றது. தடுப்பூசிகள் ஏன் போடுகின்றார்கள்?? கொடூர, பரவக்கூடிய ,குணப்படுத்த முடியாத போன்ற நோய்களை வரும் முன்பே வராமல் தடுப்பதற்காக தடுப் பூசிகள் போடப்படுகின்றது. […]
  • சக்கரை வியாதி உடையவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது…
    சக்கரை வியாதி (சீனி வருத்தம்) உடையவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது (பொதுவாக) நோவு இருக்காது, Silent MI – இதை வலியில்லாத மாரடைப்பு என்பர் சக்கரை நோயுடைய (சீனி வருத்தம்) ஒருவர்; • தீடீர் என மயங்கி விழுதல் • உடம்பு குளிராகி மயங்கிய நிலையில் இருத்தல். • உடல் குளிராகி வியர்த்து சோர்ந்து போதல் • காலையில் கண் முழிக்கவில்லை ஆனால் சுவாசிக்கின்றார் என இருக்கும் போது இது என்ன காரணமாக இருக்கும் என்றும் அவசரமாக […]
  • திருமணமான பெண்களுக்கு ஏற்படும் சிறு நீரக பிரச்சினைகள்
    திருமணமான பெண்களுக்கு… அடிவயிறு நோவுது, சலம் எரியுது, சலம் போய் முடியும் போது கடுக்குது, சலம் சொட்டு சொட்டாக போகின்றது, அடிக்கடி சலம் போதல், சலம் சிவப்பு நிறமாக போகின்றது, நடுக்கத்துடன் காய்ச்சல். என்றெல்லாம் பல பிரச்சினைகள் பொதுவாக வருவதற்குக் காரணம் சிறு நீர் கிருமித் தொத்தாகும். இதை உருவாக்கும் காரணங்கள் பலவாக இருந்தாலும் ஆலோசனைக்காக பிரதான ஒரு விடயத்தை இங்கே முன்வைக்கின்றேன். ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் சிறு நீர் பிரச்சினைகள் வருவதற்குக் காரணம் அவர்களின் […]
  • குளிக்கும் போது தலையில் முதலில் நீர் ஊற்றி குளிக்கலாமா?
    குளியலறையில் குளிக்கும் போது திடீர் மரணம்!… குளியலறையில் குளிக்கும் போது மயங்கி விழுதல்… குளியலறையில் குளிக்கும் போது கை, கால் வழக்கமற்றுப் போதல்… இதற்கெல்லாம் காரணம் பிழையான குளிப்பு முறையே!!! நமது இரத்தமானது சூடானது. அதாவது சூழல் வெப்பனிலையை விட அதிகமானது (37°C). இரத்த ஒட்டம் சீராகவும் உடம்பின் தொழிற்பாடுகள் ஒழுங்காகவும் நடைபெறுவதற்கு இவ் வெப்பநிலை மிகவும் அவசியம். சூழல் வெப்பனிலை குறையும் சந்தர்ப்பத்தில் (குளிர்) நமது உடல் நடுங்குவதன் மூலம் மேலதிக வெப்பம் உடலில் உற்பத்தியாவது […]
  • Health Development Committee Meeting (2018/03/24)
    24/03/2018 சனிக்கிழமை Olive Restaurant ல் மாலை 4.00மணிக்கு சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் கன்னி ஒன்றூகூடல் நடைபெற்றது. மாஷாஅல்லாஹ். சுகாதாரப் பிரிவின் தலைவர் Dr. Rizwan அவர்கள் பிஸ்மியுடன் கூட்டத்தை ஆரம்பித்து சம்மேளனத்தின் தலைவர் காமில் இம்டாட் அவர்களை விழித்தவராக இன்று வருகை தந்த அனைத்து சகோதரர்களையும் அன்புடன் வரவேற்று தனது உரையை ஆரம்பித்தார். சம்மாந்துறையிலே கிட்டத்தட்ட 220 பதியப்பட்ட சங்கங்களும் முன்னூற்றுக்கு மேற்பட்ட பதியப்படாத சங்கங்களும் காணப்படுகின்றன. மேலும் கூட்டுறவுச்சங்கங்களும் காணப்படுகின்றன.இவ் […]
  • Youth & Sports Committee Meeting (2018/03/25)
    கூட்டறிக்கை 1 Youth & Sports Committee உடய முதலாவது கூட்டமானது 2018.03.25 Sunday நேரம் 7.00 மணியளவில் அமைப்பின் செயலாளர் தானிஸ் அவர்களின் இல்லத்தில் அல்லாவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப கட்டமாக செயலாளரினால் இவ் அமைப்பு தொடர்பான அறிமுகம் இடம்பெற்றது. இதன் பிறகு உரையாற்றிய சம்மேளனத்தினுடைய தலைவர் Mr. Kamil Imdad அவர்கள் சமுகசேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் தொடக்கம், தோற்றப்பாடு மற்றும் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார். பின் உறுப்பினர்களின் துறை தொடர்பான கருத்துகளும் […]
  • சம்மாந்துறை சுகாதார மேம்பாட்டு குழு
    “சம்மாந்துறை எனும் நம் தாயின் சுகாதாரத்தை மேம்படுத்த விரும்பிய சமூகசேவையாளர்களை அழைக்கின்றோம்” விதி முறைகள் சம்மாந்துறையில் உள்ள சமூக சேவை அமைப்புகள் ஏதாவது ஒன்றில் அங்கம் வகித்தல். நமதூரின் சுகாதாரத்தைப் பற்றிய சிந்தனை உடையவராக இருத்தல். சமூகத்துக்கு நல்லதை நினைக்கும் சிந்தனையாளராக இருத்தல். சமூக சேவை அமைப்பு பதிவு இலக்கம் இருந்தால் மிகவும் நன்று. ஆகவே தங்களுக்கும் இணைய விருப்பமென்றால் பின்வரும் Link ஊடாக இணையுங்கள். Follow this link to join my WhatsApp group: […]
  • ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள்
    ​அண்மைக்காலமாக நடந்து வரும் இன வன்முறைகள் கண்டிக்கத்தக்கது மேலும் அதற்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம்மில்லை. அதேநேரம் நாங்கள் whatsapp, FB களில் எங்களது கண்டனத்தினையும் நாட்டில் நடக்கும் சம கால பிரச்சனைகளையும் உடனுக்குடன் பகிர்ந்தோம் !!! ஆனால் அவை மட்டுமா நாங்கள் செய்ய வேண்டிய பணி ? வீட்டில் இருந்து கொண்டு செய்யும் வேலைகளை விட சமூகம் சார்ந்த கருத்தாடல்களையும் / ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களையும் செய்வதற்கு சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் […]
  • சம்மாந்துறை பிரதேச சபை 2018
    2018 உள்ளூராட்சி சபை தேர்தல் – 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் சுருக்கம் கீழே உள்ள அட்டவணையில் காணப்படுகிறது.
  • சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
    சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து கடந்த 2017.10. 01 ம் திகதி உலக சிறுவர் தின நிகழ்வை மிக கோலாகலமாக நடாத்தியது. இந்நிகழ்வில் பங்குபற்றிய சகல பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்பூட்டல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 2018.01. 12 ம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வினை சம்மேளனத்தின் சிறுவர் அபிவிருத்தி குழு தலைவரான ஜனாப் MM. வாஹிட் […]
  • சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு குடி நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் அன்பளிப்பு
    சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு குடி நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், 2018-01-06 ஆம் திகதி மக்களின் சுகாதார நலன்புரி அமைப்பினால் ( Well Wishers Of BH/Str) அன்பளிப்பு செய்யப்பட்டது. சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நலன் விரும்பிகளால் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இயங்கிவரும் சம்மாந்துறை மக்களின் சுகாதார நலன்விரும்பி அமைப்பினால் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் ஆகிய இடங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சுத்தமான நீரை அருந்த வேண்டும் என்ற நோக்கில் இரண்டு நீர் […]
  • சம்மாந்துறை பிரதேச சிவில் அமைப்புக்களின் மாதாந்த கூட்டம் (2017/12/17)
    சம்மாந்துறை பிரதேச சிவில் அமைப்புக்களின் மாதாந்த கூட்டம் நேற்று (2017/12/17) நடைபெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் ஜனாப் SL. ஹனிபா அவர்களும் கலந்து கொண்டார். பல ஆக்கபூர்வமான முடிவுகள் சமூகம் சார்ந்து எடுக்கப்பட்டது.
  • தேசிய ஒன்று கூடல்
    தேசிய அங்கிகாரம் பெற்ற பிரதேசத்துக்கான ஒரே ஒரு சம்மேளனத்தின் தேசிய ஒன்று கூடல் இன்று நடைபெற்றது. இதன் போது பல தீர்மாணங்களும் நிறைவேற்றப்பட்டது. பொறுப்புள்ள தன்னார்வளர்களும் , சமூக அமைப்புக்களும் சம்மேளத்துடன் கைகோர்த்து வெற்றி நடை போட சம்மேளனத்துடன் இணையுங்கள்…