Environment

ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது எது?

ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அதன் கல்வி கற்றோர் எண்ணிக்கையிலோ அல்லது எத்துனை காபட் விதிகளை இட்டோம் என்பதிலோ அல்லது எத்துனை கட்டடங்கள் உள்ளது என்பதிலோ மட்டும் அல்ல மாறாக அதன் ஒழுக்க விழுமியங்களிலும் தங்கி இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது!!!

இந்த புகைப்படத்தினை சற்றே பாருங்கள் இது நமது பிரதேசத்தினை சேர்ந்த வயல் வெளியும் அதற்கு நீர் வழங்கும் வடிகாலுமே!!! மனதினை கனமாக்கும் இந்த காட்சியும் நிலையம் நமது வீட்டிலும் / நமது அண்டை வீட்டிலும் பாவிக்கப்படும் கழிவுகளே அன்றி வேறில்லை!!!

1. சக்காத் கொடுக்காதும் / நோன்பு பிடிக்காததும் மட்டுமே பாவமான செயல் அல்ல மாறாக சமூக பொறுப்புக்களில் இருந்து விலகுவதும் பாவமே …

2. இங்கே பாருங்கள் மழை பெய்யும்போது வடிகான்களில் நீர் நிரம்பி வரும் அந்த நேரம் பாத்து தமது குப்பைகளை வடிகான்களில் இடும் கீழ்த்தரமானவர்களே அதிகம் அதிலும் குறிப்பாக வடிகான்களில் வாழைமரங்களை இட்டு நீரோட்டத்தை அடைக்க செய்யும் முட்டாள்களும் நம்மத்தியிலே உள்ளனர்.

3. இவை அத்துனையும் விவசாயத்தினை நஞ்சூட்டும் என்பதில் அச்சம் இல்லை.

4. இறுதியில் ஆறு, குளம் கடல் என அத்துனையும் மாசுற்று மானிடர் வாழ்கையில் பேரழிவையே கொண்டு வரும்…

5. அதிகாரம் பெற்றவர்களே பௌதீக வளம் மட்டும் அபிவிருத்தி அல்ல இயற்கையை காப்பதும் அபிவிருத்தியே!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *