News

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு! 

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு! 

(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்) 

 வீடியோ;https://youtu.be/A4XDrz7DZFw?si=oj8okquBm4oHbjzA
 சம்மாந்துறை தேசிய பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A,8A,7A என சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.டி. முஹம்மட் ஜனோபர் தலைமையில் நேற்று (18) நடைபெற்றது.  


இன் நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ் செய்யது உமர் மெளலானா ,பிரதி கல்விப்ணிப்பாளர் ஏ. எல்.அப்துல் மஜீத், சம்மாந்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ. நசீர்,சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் எம்.ஐ ஹனீபா,சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸூரா தலைவர் எம்.ஐ அமீர்,பிரதி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 
 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் 14 மாணவர்கள் 9A சித்தியையும்,25மாணவர்கள் 8A(B,C)சித்தியையும்,17 மாணவர்கள் 7A (BB,CC,BC,CS)சித்தி என மொத்தமாக 56 மாணவர்களுக்கு சான்றிதழ்,நினைவுச் சின்னம், பதக்கங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Mohamed Nasim
Journalist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *