About

Jump To List of Schools குடி வரலாறு …

Background of the Village

Map

Sammanthurai Divisional Secretariat is situated in Ampara district of Eastern Province, Sri Lanka. This Village was a main trade center for the south Eastern and Kandy merchants in the early history. It was the border of the Batticaloa region.

Arabs and Eastern trades arrived the south eastern region for their business purposes earlier then the Porthugees and Hollands.There so many evidence about their invasion. In the early, Indu- Muslim traders called “Sammakatharar”, arrived by the Baticaloa lake from the bay of the Bangal. They camped there and used the region as their main trade route and they export and import their goods.

The direct translation of the word for goods is in tamil “Samaan” and port is Thurai ‘the region which used for their tade purposes “Sammanthurai” . Later It was named as Sammnathurai and called Granary of east. It was famous for paddy cultivation and produced a type of rice called “samba”. This name was another reason for the village. It was called “sammanthurai”those days. When the time changed the name was fixed as sammanthurai.

Sammanthurai Divisional Secretariat division is situated in Ampara district of the Eastern Province, Sri Lanka. It is one of The DS Divisions out of 20 divisions in Ampara district and it contains a large extend of land with the huge population.

The early Sammanthurai was 248.37 sq km extent of land and divided in to 83 GN Divisions. Irakkamam village Which was Under the Sammanthurai DS Division upgraded as Separate Divisional Secretarial including 6 villages later Navithanvali area was upgraded as Separate Divisional Secretariat including 4 villages with 20 GN Divisions.

After that the remaining area is contained 123.02 sq km extent of land and it included 23 villages with 51 GN Divisions. The latitude of the Village is 7’20’ north the longitude is between 80” – 45”. The average temperature is 27’C to 30’C for the year. And it has a continuous rain falls between 1500 mm to 2225mm for the year.

Sammanthurai is a situated in the eastern part of Indian ocean of Sri Lanka and locates. and west of the coastal village. The low level of the ground is 09 m hight from the sea level and it increases up to 27 m height. And the village consist a flat land, Mullurian mixed ground and rock hills about 50m height in several places there.

NO Ethnicity Population
01 Muslims 61,885
02 Hindus 8,394
03 Others 1,001
  Total 71,280

வரலாறு…சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். புவியியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள்.

அரேபியர்கள் இலங்கையில் வர்த்தகர்களாக அறிமுகமாவதற்கு முன்னர் ஆதம் மலையை (Adams Peak) தரிசிக்க வருகின்ற யாத்திரிகர்களாகவே அறியப்பட்டனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள வாசனைத்திரவியங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளதை அறிந்தனர். அதனால் பின்னாட்களில் அவர்களின் வருகை வர்த்தக நோக்கத்தைக் கொண்டதாக அமைந்தது. அரேபியர் மத்தியதரைக்கடல் மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கூடாகச் செய்து வந்த வர்த்தகமும் அவர்களுக்குப் பரிச்சயமான வர்த்தகப் பாதைகளும் இந்தியாவினதும், இலங்கையினதும் அறிமுகத்தைக் கொடுத்தன. அவர்கள் காற்று வீசும் காலத்திற்கேற்ப வங்காள விரிகுடாவினூடாக இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்தனர். (அரேபியரின் முதல் பிரவேசம் இலங்கையின் எப்பகுதியில் இடம் பெற்றது என்பதில் வரலாற்று ஆசிரியளுக்கிடையில் கருத்து முரண்பாடு நிலவுகிறது.) இவர்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலங்களில் கட்டுமரக் கப்பல்கள் (பாய்க்கப்பல்), ‘சம்பன்’ எனப்படும் ஒருவகை வள்ளம், சிறிய படகுகள் ஆகியவை மூலம் வங்காள வரிகுடாவின் ஊடாகப் பயணித்து இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்து, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கின் சம்மாந்துறை வரையும் இயற்கையாக விரிந்து சென்ற வாவியினூடாகச் சென்று வாவியின் தென்திசையில் அமைந்திருந்த சம்பன்துறையில் தரைதட்டி, அங்கு வள்ளங்களைக் கட்டிவிட்டு தரைமார்க்கமாகச் சென்று ஆதம் மலையைத் தரிசித்தனர்.

அரேபியரும் பாரசீகரும் துலுக்கர்களும் பட்டாணியர்களும் தென்கிழக்கில் மட்டக்களப்பு வாவி அல்லது ஆற்றின் உதவிகொண்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு 12 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டிருக்கும் அல்-இத்ரீசி, அல்-பூர்பானி, அபூசெய்யது என்னும் புகழ் பெற்ற அரேபிய புவியியலாளர்களின் குறிப்புக்கள் சான்றுகளாக உள்ளன. அண்மைக்காலம் வரை தென்கிழக்கு மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டு வந்தது.

அரேபியக் கடலோடியான சிந்துபாத் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் “இலங்கையில் நான் தரையிறங்கிய போது ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் என்னுடன் அரபு மொழியில் மிகச் சரளமாக உரையாடினார். இங்கு வாழ்ந்த மக்கள் மஃபார் என்று அழைக்கப்பட்டனர்.” இந்தச் அரபிமெரழிச் சொல்லுக்கு தோணித்துறை என்பது பொருளாகும். இந்த மஃபார் என்ற சொல்லே திரிபடைந்து மட்டக்களப்பு என்றும் திரிபடைந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் தென்கிழக்கிலுள்ள சம்மாந்துறைச் சார்ந்துள்ள களப்பகுதியையே நீண்ட காலமாக குறித்து வந்திருக்கிறது. சம்மாந்துறைக்கு அண்மித்த மட்டக்களப்பு போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்பிருந்தே மிகப் பிரசித்தி பெற்ற கப்பல் கட்டும் இடமாகவும், வர்த்தகத் துறைமுகமாகவும் இருந்து வந்துள்ளது. போர்த்துக்கேயர் 1628 ம் ஆண்டு புளியந்தீவில் தமது கோட்டையைக் கட்டியதன் பின்பே, மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் சம்மாந்துறைக்கு இருபது மைல் தூரம் வடக்கே இருந்த பிரதேசத்தைக் குறிப்பதாக மாறியது.

மட்டக்களப்பு வாவியின் தென்கோடிக்கப்பால் உள்ள பகுதியே ஒல்லாந்தர் காலம் வரைக்கும் மட்டக்களப்பு என்னும் பெயரால் அழைக்கப்பட்டதென்றும், ஒல்லாந்தர் தமது கப்பற் பிரயாண வசதிக்கேற்றதாக வாவியின் வடக்கேயுள்ள கடல் வாயினைத் தெரிந்து, அவ்விடத்திலிருந்த புளியந்தீவிலே கோட்டையினை அமைத்த பின்னரே மட்டக்களப்பென்ற பெயர் வாவியின் வடபகுதிக்கும் சென்றதென்று அறிகிறோம். இலங்கையின் சிறப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலிருந்து திரண்டு வந்த முற்குகர் கூட்டத்தினர், ஈழத்தின் கிழக்குக் கடல் வழியாக வந்து உப்புநீர் ஏரியொன்றின் ஊடாக நாட்டினுள் புகுந்து தமது ஓடங்களைச் செலுத்தினர் என்றும், தெற்கு நோக்கி நீண்ட தூரம் சென்ற அவரகளது ஓடங்கள் தரைதட்டியதும் அவ்வேரியின் எல்லைக்குத் தாம் வந்து விட்டதை அறிந்து அப்பகுதிக்கு மட்டக்களப்பு (களப்புமட்டம் – வாவியின் எல்லை) என்று பெயரிட்டனர் என்றும் வழங்குகின்ற கேள்விச் செய்தி இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.

15 ஆம் நூற்றாண்டு வரையும் வாவியின் தென்பகுதியே மட்டக்களப்பு எனப் பெயர் பெற்றிருந்த வரலாற்றை வீரமுனைச் செப்பேடு, சீர்பாதர்வரன்முறைக் கல்வெட்டு, கண்ணகி வழக்குரை காதை என்பன குறித்துள்ளன.

மட்டக்களப்பின் துறையாக சம்மாந்துறையே விளங்கியது. சம்மாந்துறை என்ற பெயர் ‘ஹம்பன்’ என்னும் சுமேரிய மொழிச் சொல்லின் திரிபாகும். அதன் பொருள் ‘கப்பல் கட்டுமிடம்’ என்பதாகும்.

இலங்கையில் இப்போதும் சம்மன்காரர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இருக்கின்றனர். இவர்களை சிங்களவர்கள் ‘ஹம்பாங்காரயா’ என்று அழைக்கின்றனர். ஹம்பாந்தோட்டை என்னும் ஊரும், சம்மாந்துறை என்னும் ஊரும் இலங்கையின் தென்பகுதியில் நிலரீதியாகத் தொடர்புபட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பில் ஆதியில் முஸ்லிம்கள் வாழ்ந்த இடம் சம்மான்கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. அங்கு அமைந்திருக்கும் அழகிய பள்ளிவாசல் ‘சம்மான்கோட்டைப் பள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறது.

காசியப்ப மன்னன் இலங்கையின் வடக்கில் வல்லிபுரம், கிழக்கில் சம்மாந்துறை, மேற்கில் களனி போள்ற இடங்களில் இருந்த துறைமுகங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தான் என அறியமுடிகிறது. சம்மாந்துறை கப்பல் கட்டும் துறைமுகமாகத் திகழ்ந்தது என சேர் எமெர்சன் டெனன்ட் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது. இன்றும் கூட சம்மாந்துறையில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகள் மட்டக்களப்புத் தரவை-01, மட்டக்களப்புத் தரவை-02 என்று அழைக்கப்படுகின்றமை இதற்குச் சிறந்த ஆதாரமாகும். சம்மாந்துறை பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், தபால் நிலையம், மாவட்ட வைத்தியசாலை ஆகியன மட்டக்களப்புத் தரவையிலேதான் அமைந்துள்ளன. மட்டக்களப்புத் தரவை, முக்குவர் வட்டை ஆகிய பிரதேசங்களைத் தாண்டி சம்மாந்துறையின் அல்லை களப்புப் பகுதியை நோக்கிச் செல்லும் போது அங்கு சேறடர்ந்த களப்பகுதி காணப்படுகிறது. இது மட்டக்களப்பு வாவியுடன் இணையும் பகுதியாகவும் உள்ளது. அல்லை சதுப்பு நிலப்பகுதியும் அதனை அண்டிய சேவகப்பற்று வயற்காணிகளும் முன்னர் நிலப்பரப்பாகவே இருந்தன. பின்னர் காலப்போக்கில் வண்டல் மணலால் மூடப்பட்டுள்ளன. இந்த வயற்காணிகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தற்போதும் வழமையாகக் காணப்படுகிறது. இன்று சம்மாந்துறை தூர்ந்துபோன, கைவிடப்பட்ட துறைமுகமாக இருப்பதற்கு அந்நிய ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணமாகும். அத்துடன் இது நேரடியாகக் கடலுடன் சேராத களப்புசார் துறையாகக் காணப்பட்டதையும் குறிப்பிடலாம். முதியோர்களின் வாய்வழித் தகவல்களின்படி, சம்மாந்துறையையும் காரைதீவையும் ஒரு காலத்தில் களப்பில் சேரும் நீர் பிரித்திருந்ததாகவும், மாவடிப்பள்ளி வரையிலும் தரைவழித் தொடர்பு இருந்ததாகவும், அதற்கப்பால் காரைதீவை அடைய ஓடங்களைப் பயன்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.

சம்மாந்துறை கப்பல் கட்டும் துறைமுகமாகவும், பழுதுபார்க்கும் இடமாவும் விளங்கியதனால், ஆதம் மலையைத் தரிசித்து விட்டுத் திரும்பியவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றை எதிர்பார்த்து சம்மாந்துறையை அண்மித்த பகுதிகளில் அல்லது இறங்குதுறையாகவும், பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் விளங்கிய கிட்டங்கி, பட்டினமாகத் திகழ்ந்த மண்டூர் ஆகிய இடங்களில் தங்கியிருந்தனர் எனத் தெரிய வருகிறது.


குடி வரலாறு …

1940 களில் சம்மாந்தறையில் 16 குடிகள் காணப்பட்டன. பிற்காலத்தில் சம்மாந்துறையில் 33க்கு மேற்பட்ட குடிகள் காணப்பட்டிருந்தாலும் தற்போது 31 குடிகளே வழக்கில் உள்ளன.

குடிகள் விபரம்.

  1. கணக்கன்கத்தர குடி
  2. மாமனாப் போடி குடி
  3. தேன்முதலி குடி
  4. பெரிய வெள்ளரசன் குடி
  5. சங்கதி குடி
  6. இராசாம்புள்ள குடி
  7. சுல்தான் குடி
  8. கோசப்பா குடி
  9. சின்ன வெள்ளரசன் குடி
  10. சேனைக் குடி
  11. பெரிய படையான் குடி
  12. ஆதம் பட்டாணி குடி
  13. நெய்னா ஓடாவி குடி
  14. ஓடாவி குடி
  15. வடக்கனா குடி
  16. மாந்தரா குடி
  17. செட்டிப்புள்ள குடி
  18. உதுமான் புள்ள குடி
  19. உலவிப்போடி குடி
  20. பவள ஆராச்சி குடி
  21. மாப்பிள்ளை மரைக்கார்குடி
  22. கச்சன் ஓடாவி குடி
  23. பொன்னாச்சி குடி
  24. சேர்முஹம்மது குடி
  25. பேரிய படையாண்ட குடி
  26. மடத்தடி குடி
  27. மூத்தநாச்சியார் குடி.
  28. பணிக்கனா குடி
  29. கையூம்மலையார் குடி.
  30. மலையாளத்து லெவ்வை குடி.
  31. வைத்திய நாச்சியார் குடி.

 

சம்மாந்துறையில் உள்ள பள்ளிவாசல்கள்.

  1. பெரிய பள்ளி வாசல்            – ஜூம்மாப்பள்ளி
  2. மஸ்ஜிதுல் ஸலாம்                 – ஜூம்மாப்பள்ளி
  3. மஸ்ஜிதுல் அழ்பர்                  – ஜூம்மாப்பள்ளி
  4. மஸ்ஜிதுல் பத்ர் ஹிஜ்றா    – ஜூம்மாப்பள்ளி
  5. மஸ்ஜிதுல் ஹிலால்               – ஜூம்மாப்பள்ளி
  6. மஸ்ஜிதுல் ஜாரியா               – ஜூம்மாப்பள்ளி
  7. மஸ்ஜிதுல் ஜலாலியா          – ஜூம்மாப்பள்ளி
  8. மஸ்ஜிதுல் உம்மா (புதுப்பள்ளி)
  9. மஸ்ஜிதுல் முகையதீன் (சின்னப்பள்ளி)
  10. மஸ்ஜிதுல் தைக்கியா
  11. மஸ்ஜிதுல் கைர்
  12. மஸ்ஜிதுல் மபாஸா
  13. மஸ்ஜிதுல் நூர்
  14. மஸ்ஜிதுல் மனார்
  15. மஸ்ஜிதுல் முனீர்
  16. மஸ்ஜிதுல் ஜமாலியா
  17. மஸ்ஜிதுல் ஜபல்
  18. மஸ்ஜிதுல் ஹுதா
  19. மஸ்ஜிதுல் முஅல்லா
  20. மஸ்ஜிதுல் இலாகி
  21. மஸ்ஜிதுல் ஸபுர்
  22. மஸ்ஜிதுல் புஸ்றா
  23. மஸ்ஜிதுல் பதஹ்
  24. மஸ்ஜிதுல் அல் அக்ஷா
  25. மஸ்ஜிதுல் நஹ்ர்
  26. மஸ்ஜிதுல் மிஸ்பாஹ்
  27. மஸ்ஜிதுல் பிர்தௌஸ்
  28. மஸ்ஜிதுல் அப்ரார்
  29. மஸ்ஜிதுல் உம்றா
  30. மஸ்ஜிதுல் அறபா
  31. மஸ்ஜிதுல் முத்தகீன்
  32. மஸ்ஜிதுல் தக்வா
  33. மஸ்ஜிதுல் சாலிஹீன்
  34. மஸ்ஜிதுல் பலாஹ்
  35. மஸ்ஜிதுல் றஹ்மான்
  36. மஸ்ஜிதுல் மதீனா
  37. மஸ்ஜிதுல் அல்அர்ஷத்
  38. மஸ்ஜிதுல் கப+ரிய்யா
  39. மஸ்ஜிதுல் றாசிக்கீன்
  40. மஸ்ஜிதுல் கலந்தரப்பா பள்ளிவாசல் (மல்கம்பிட்டி)
  41. மஸ்ஜிதுல் விரயடியப்பா பள்ளிவாசல் (கொண்டவட்டுவான்)
  42. மஸ்ஜிதுல் காட்டவூலியா பள்ளிவாசல் (சேனைவட்டை)
  43. கண்கத்தியப்பா ஸியாரம்
  44. மஸ்ஜிதுல் ஹமீதியா (ஏத்தாளக்குளம்)
  45. மஸ்ஜிதுல் பலாஹியா (பெரியவெளி வட்டை)
  46. மஸ்ஜிதுல் ராஸி (மல்வத்தை)
  47. மஸ்ஜிதுல் காத்தான்ட வட்டை
  48. மஸ்ஜிதுல் ரஹ்மானியா (ஹிஜ்றாபுரம்)
  49. கள்ளியம்பற்றை பள்ளிவாசல்.

கல்விக்கூடங்கள் …

சம்மாந்துறையில் ஆரம்பப் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் வரை பலவகையான கல்விக்கூடங்கள் உள்ளன. அவையாவன:

  • தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பிரிவின் வளாகம்
  • சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி
  • தொழில் பயிற்சி நிலையம்
  • சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்
  • பல ஆரம்ப பாடசாலைகள்
  • பல உயர்தர பாடசாலைகள்
  • சம்மாந்துறை வலய கல்வி அலுவலகம்.
  • ஆறு பொது நூலகங்கள்.


List of Schools under Sammanthurai Education Zone.

No Schools in Sammanthurai Education Zone
1 Km/St/Aethalakkulam Govt. Muslim Mixed School
2 Km/St/Al-Ameer Vidyalayam
3 Km/St/Al-Aqsha Vidyalayam
4 Km/St/Al-Arsath Maha Vidyalayam
5 Km/St/Al-Asman Vidyalayam
6 Km/St/Al-Azhar Vidyalayam
7 Km/St/Al-Hamra Vidyalayam
8 Km/St/Al-Jenis Vidyalayam
9 Km/St/Al-Madheena Vidyalayam
10 Km/St/Al-Manar Muslim Vidyalayam
11 Km/St/Al-Marjan Muslim Ladies College
12 Km/St/Al-Muneer Vidyalayam
13 Km/St/Arafa Vidyalayam
14 Km/St/As-Sama Vidyalayam
15 Km/St/Dharul Uloom Vidyalayam
16 Km/St/Dharussalam Maha Vidyalayam
17 Km/St/Gazzaly Muslim Vidyalayam
18 Km/St/Hijra Muslim Vidyalayam
19 Km/St/Ismail Vidyalayam
20 Km/St/Jamaliya Vidyalayam
21 Km/St/Mafasa Vidyalayam
22 Km/St/Majeedpuram  Vidyalayam
23 Km/St/Malkampiddy Govt. Muslim Mixed School
24 Km/St/Malligaitivu G.T.M.S.
25 Km/St/Muslim Mahalir Vidyalayam
26 Km/St/Puthunagar G.T.M.S.
27 Km/St/Saboor Vidyalayam
28 Km/St/Sammanthurai Muslim Maha Vidyalayam
29 Km/St/Seerpathadevi Vidyalayam
30 Km/St/Sri Korakkar Tamil Maha Vidyalayam
31 Km/St/Sri Navalar Vidyalayam
32 Km/St/Thahira Vidyalayam
33 Km/St/Valathapiddy G.T.M.S.
34 Km/St/Veeramunai Rama Kirishna Mission Vidyalayam
35 Km/St/Vickneshwara Vidyalayam
36 Km/St/Vipulanandha Maha Vidyalayam
37 Km/St/Zahira Maha Vidyalayam

 

  1. முக்கிய சில தரவுகள் : விக்கிபீடியா
  2. ஊரில் வெளியிடப்பட்ட நூல்கள்.