News

சம்மாந்துறைக்கென புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம்.

ஒவ்வொரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் கீழ் மாவட்ட பொலீஸ் பிரிவு காணப்படும். அந்த வகையில் சம்மாந்துறை பொலீஸ் பிரிவானது கல்முனை உதவி மாவட்ட காரியாலயத்தின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்தது.

இதனை தொடர்ந்து அண்மைக்காலமாக பல்வேறு பொலிஸ் பிரிவுகள் உருவாக்கப்பட்டதன் பின் தற்போது சம்மாந்துறையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அதிகாரி காரியாலயம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு. செனவிரட்ன அவர்களின் தலைமையில் நேற்று (26.02.2023) மக்கள் பாதுகாப்பு குழுக்களுடன் ஆன கலந்துரையாடல் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.

இதன் போது நிலைய பொறுப்பதிகாரி திரு. ஜயலத், பொலிஸ் உபதேசக்குழுவின் தலைவர் அ.ஜ. காமில் இம்டாட், கிராம நிலதாரிகள், மக்கள் பாதுகாப்புக் குழுவின் தலைவர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *