Other

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறல்

Eid Mubarak வாழ்த்து செய்தி மூலம் பல கோடி ரூபாக்கள் வீண் விரயம் செய்யப்படுவதை தடுப்போம் !!!

ஒருவருக்கு ஒருவர் சலாம் சொல்லுவதும் வாழ்த்துக்கள் பரிமாறுவது கட்டாயாமான ஒன்று அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை !!!

இருந்த போதிலும் அதனை செயல் விளைவுடையதாக செய்வதன் மூலம் பல கோடிகள் வீண் விரயமாக்கப்படாமல் சேமிக்க முடியும் !!! இந்த பணத்தை ஸதக்கா செய்வதினால் நன்மையும் பெற்று கொள்ளலாம்.

நாம் Eid Mubarak வாழ்த்துக்களை WhatsApp மூலம் அனுப்பும்போது போட்டோவாக அல்லது வீடியோவாக அனுப்புவதனால்,

  1. அனைவரும் அதனை Download செய்ய வேண்டி உள்ளது இதன் போது சிறு துள்ளி பெரும் வெள்ளம்போல் பலருடைய data வீண் விரயம் செய்யப்படுகின்றது இது உலகம் முழுக்க பல கோடியை ரூபாக்களை தாண்டும் என்பதில் ஐயம்மில்லை.
  2. மேலும் அதிகமான போட்டோக்கள் forward massage கள் Download செய்யாமலே விடப்படுகின்றது காரணம் அங்கு தூய்மை இல்லை.

மற்றும் அந்நிய இணையத்தள பக்கம் மூலம் (3rd party website URL) வாழ்த்துக்களை அனுப்புவதன் மூலம்;

  1. நீங்கள் அந்த இணையத்தள முகவரியை பிரபலமாக்கிறீர்கள்.
  2. இதன் மூலம் அந்த இணையத்தள உரிமையாளருக்கு சம்பாதித்து கொடுக்கிறீர்கள்
  3. சில வேளை உங்கள் தரவுகளை உங்களை அறியாமல் இனம் தெரியாத நபருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள்.

எனவே இலகுவான வழிமுறையாக எளிய Text வடிவில் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய முறையில், உதாரணமாக Wish you all a happy Eid-Mubarak அல்லது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் போன்று பகிர்ந்திடுவோம்.

யாவற்றுக்கும் மேலாக முடிந்தவரை உறவினர்களை சந்துத்து அவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துவது, ஸலாம் சொல்லுவது சாலச்சிறந்தது. இதன் மூலம் வெறும் இலத்திரனியல் உறவுகளால் மட்டுப்படுத்தி விடாமல் உண்மையான உறவுகளால் பலமாக ஒன்றிணைவோம்.

A social awareness message from www.sammanthurai.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *