Healthcare

குளிக்கும் போது தலையில் முதலில் நீர் ஊற்றி குளிக்கலாமா?

குளியலறையில் குளிக்கும் போது திடீர் மரணம்!…
குளியலறையில் குளிக்கும் போது மயங்கி விழுதல்…
குளியலறையில் குளிக்கும் போது கை, கால் வழக்கமற்றுப் போதல்…

இதற்கெல்லாம் காரணம் பிழையான குளிப்பு முறையே!!!

நமது இரத்தமானது சூடானது. அதாவது சூழல் வெப்பனிலையை விட அதிகமானது (37°C). இரத்த ஒட்டம் சீராகவும் உடம்பின் தொழிற்பாடுகள் ஒழுங்காகவும் நடைபெறுவதற்கு இவ் வெப்பநிலை மிகவும் அவசியம். சூழல் வெப்பனிலை குறையும் சந்தர்ப்பத்தில் (குளிர்) நமது உடல் நடுங்குவதன் மூலம் மேலதிக வெப்பம் உடலில் உற்பத்தியாவது மட்டுமன்றி உரோமங்கள் சிலிர்ப்பதன் மூலம் வெப்பம் காவுகை மூலம் வெளியேறுவதும் குறைக்கப்படும். இவ்வாறு சூழல் வெப்பநிலை குறைவடையும் போது உடலானது தனது வெப்பத்தை சமநிலையாக வைத்திருப்பதற்கு பல தொழிற்பாடுகளைச் செய்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்போது கேள்விக்கு வருவோம்.

குளிக்கும் போது தலையில் முதலில் நீர் ஊற்றி குளிக்கலாமா??? இல்லை

உடம்பிலே நீர் படும் போது உடல் வெப்பனிலை குறைவடைவதைத் தவிர்ப்பதற்காக மேலே குறிப்பிட்டது போல தொழிற்பாடுகள் நடைபெற்று வெப்பநிலை கூட்டுவதற்கான செயற்பாடுகள் நடைபெறும். ஆனால் தலையில் மூளையானது மண்டையோட்டினால் இறுக்கமாக அடைக்கப்பட்டுக் காணப்படும் அபூர்வமான அல்லாஹ்வின் படைப்பாகும். திடீர் என நீர் தலையில் ஊற்றப்பட்டதும் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை ஈடு செய்ய முடியாமல் ஏற்படும் குருதியின் வெப்பநிலை உயர்வானது இரத்தக்குழாய்களை உடைக்க எத்தனித்து எத்தனித்து நாளடைவில் பாரிசவாதத்தை உண்டு பண்ணும். இதிலையும் உயர் குருதியமுக்கம், கொளஸ்திரோல், ஒற்றைத் தலைவலி உடையவர்களுக்கு வாய்ப்பு அதிகம்.

ஆகவே நாம் எப்படி குளிக்க வேண்டும்?

கால் —- இடுப்பு —- வயிறு —- நெஞ்சு —- கை —- பின்பு தலையில சொட்டு சொட்டா தண்ணியை ஊற்றி நமது உடல் வெப்பநிலையை சமநிலைக்கு கொண்டு வந்த பின் நன்றாக விரும்பிய படி குளிங்க..
அதாவது உடம்பில் முதலில் நீரை ஊற்றிய பின்பே கடைசியில் தலையில் நீரை ஊற்ற வேண்டும்.
உதாரணமாக இஸ்லாம் மார்க்கம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இதை கடைமையாக்கப் பட்ட குளிப்பு முறையில் அழகாகச் சொல்லியிருக்குது. அல்ஹம்துலில்லாஹ்.

சுத்தம் ஈமானின் பாதியாகும்

எனவே இன்றைய ஆலோசனை என்ன வென்றால்

குளிக்கும் போது திடீரென தலையை முதலில் நனைக்காதிங்க
பாரிசதவாதம் வந்திடும்.

Dr. ILM Rizwan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *