Health Development

Health Development Committee Meeting (2018/03/24)

24/03/2018 சனிக்கிழமை Olive Restaurant ல் மாலை 4.00மணிக்கு சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் கன்னி ஒன்றூகூடல் நடைபெற்றது. மாஷாஅல்லாஹ்.

சுகாதாரப் பிரிவின் தலைவர் Dr. Rizwan அவர்கள் பிஸ்மியுடன் கூட்டத்தை ஆரம்பித்து சம்மேளனத்தின் தலைவர் காமில் இம்டாட் அவர்களை விழித்தவராக இன்று வருகை தந்த அனைத்து சகோதரர்களையும் அன்புடன் வரவேற்று தனது உரையை ஆரம்பித்தார்.

சம்மாந்துறையிலே கிட்டத்தட்ட 220 பதியப்பட்ட சங்கங்களும் முன்னூற்றுக்கு மேற்பட்ட பதியப்படாத சங்கங்களும் காணப்படுகின்றன. மேலும் கூட்டுறவுச்சங்கங்களும் காணப்படுகின்றன.இவ் அனைத்து சங்கங்களும் ஒன்றாக இணைந்து அரச அங்கீகாரம் பெற்ற சம்மேளத்தின் கீழ் சுகாதாரப் பிரிவிலும் உறுப்பினர்களைப் பெற்று சம்மாந்துறை மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

தற்போது நாம் ஆரம்பிக்க வேண்டிய ஆரம்ப வேலையாகிய கை கழுவுதலின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்து நமதூரில் அனைவரும் இதைச் செய்ய நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

சம்மேளனத் தலைவர் காமில் இம்டாட் உரையாற்றுகையில் சம்மேளனம் என்றால் ஊரிலுள்ளஅனைத்து சமூக சேவைகளின் ஒன்று கூட்டிய அமைப்பு.  அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனம் இது. சுருக்கமாகச் சொல்லப் போனால் மாவட்ட அபிவிருத்திக் குழு,  பிரதேச அபிவிருத்திக் குழு போன்றவற்றில் அங்கத்துவம் வகிக்கிமளவிற்கு அதிகாரம் இச்சம்மேளனத்திற்கு இருக்கின்றது.

இதில் பதி மூன்று உபகுழுக்கள் காணப்படுகின்றது. நிர்வாகக் குழுவில் பிரதான நிர்வாகிகளுடன் உப குழுக்களின் தலைவர் செயலாளர் உட்பட மொத்தமாக 40பேர் உள்ளனர். அனைவரும் ஒவ்வொரு சமூக சேவை அமைப்புகளை பிரதிநிதிப் படுத்துபவர்களாக உள்ளனர். சம்மாந்துறையிலுள்ள அனைத்து சமூக சேவை அமைப்புகளும் ஒரு குடையின் கீழ் வந்து ஒற்றுமையாக சேவைகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும் கூறுகையில் மாதிரி போலியான சம்மேளங்களும் ஊரிலே உருவாக்கப்பட்டு பேரளவில் இருப்பதாகவும், நமது சேவைகள் அப் போலிச் சம்மேளனங்களை மிஞ்சுமளவிற்கு இருக்க வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டார்.

இவ் சுகாதாரப்பிரிவு சிறப்பாக இயங்க வேண்டும் எனவும் வேண்டி விடைபெற்றார்.

வருகை தந்த சகோதரர்கள் அனைவரும் ஒவ்வொருத்தராக கை கழுவுதல் செயற்பாட்டை செய்துவிட்டு சிற்றுண்டியை சாப்பிட்டார்கள்.

கடைசியில் சுகாதாரப் பிரிவின் செயலாளராக A.M.M. Azky அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷாஅல்லாஹ் எமது பயணம் தொடரும் என்று கூறி கூட்டம் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *