சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து கடந்த 2017.10. 01 ம் திகதி உலக சிறுவர் தின நிகழ்வை மிக கோலாகலமாக நடாத்தியது.
இந்நிகழ்வில் பங்குபற்றிய சகல பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்பூட்டல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 2018.01. 12 ம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வினை சம்மேளனத்தின் சிறுவர் அபிவிருத்தி குழு தலைவரான ஜனாப் MM. வாஹிட் அவர்கள் தலைமைதாங்க பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் ஜனாப் SLM. ஹனிபா அவர்கள் கலந்து கொண்டார். அதிதிகளாக அதன் தலைவர் A.J. காமில் இம்டாட் , பிரதித்தலைவர் ALM. யாசீன் , SSO , நிர்வாக செயலாளர் MM. ஜுனைதீன் , உப செயலாளர் S. பானு , உப குழுக்களின் தலைவர்களான Dr. ILM. ரிஸ்வான் , SM. முஸ்தபா , ML. இஷாக் மற்றும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்கள் இன்னும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.