சம்மாந்துறை பிரதேச செயலக ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் பங்களிப்புடன் பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழு அமைத்தலும் பயிற்சி பட்டறையும் இன்று 2018-11-22 ம் திகதி தாருள் ஹசனாத் கலா பீடத்தில் நடை பெற்றது.
இதன் போது சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஜனாப். MM. ஆசிக், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஜனாப். பெரோஸ் , சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் தலைவர் ஜனாப். காமில் இம்டாட், செயலார் இஷாக், அனர்த்த முகாமைத்துவ குழு தலைவர் இர்பான் ஹாபிஸ் மற்றும் ஏனைய குழுக்களின் தலைவர்கள் குறிப்பாக 120 மேற்பட்ட பிரதேச சமூக சேவை ஆண் பெண் ஆவலர்கள் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் வளவாளரினால் அனர்த்த முகாமைத்துவம் பற்றிய விளக்கம், மற்றும் செயல்முறை பயிற்ச்சி போன்றன வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.