(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
சம்மேளனத்தின் பெயர் மாற்றம்
நமது சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம், அமைச்சின் தேசிய செயலக கடிதத்தின் பிரகாரம், சிவில் சமூக அமைப்புகளின் பிரதேச சம்மேளனம் – சம்மாந்துறை என பெயர் மாற்றப்பட்டுள்ளது சம்மேளனம் பற்றி அறிந்து கொள்ள – https://www.sammanthurai.org/federation/
சம்மாந்துறை பிரதேச சிவில் அமைப்புக்களின் மாதாந்த கூட்டம் (2017/12/17)
சம்மாந்துறை பிரதேச சிவில் அமைப்புக்களின் மாதாந்த கூட்டம் நேற்று (2017/12/17) நடைபெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் ஜனாப் SL. ஹனிபா அவர்களும் கலந்து கொண்டார். பல ஆக்கபூர்வமான முடிவுகள் சமூகம் சார்ந்து எடுக்கப்பட்டது.
உலர் உணவு பொருட்கள் வழங்கல்
சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தினால் இன்று 2018.05.18 ம் திகதி ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் (பொதிகள்) வறுமை கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்கு பங்களிப்பு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் பாலிப்பானாக… ஆமீன் .
