மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை, மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை, சமூக சேவை அமைப்புக்கள், அதன் சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு செய்ததிருந்தனர்.
பர்மா அரசினால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் இன படுகொலைகளை கண்டித்து முப்பெரும் சபைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து வெள்ளிக்கிழமை (08.09.2017) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.