Health Development

சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் மூன்றாவது ஒன்று கூடல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் மூன்றாவது ஒன்று கூடல் இன்று 3/06/2018 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை Olive Restaurant இல் காலை 10    மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் சம்மேளனத்தின் தலைவர் கௌரவ Kamil Imdad, கௌரவ செயலாளர் Ishak அவர்களும் கலந்து கொண்டார்.

மத அநுஷ்டானத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

சுகாதாரப் பிரிவின் செயலாளர் கௌரவ அஸ்கி அவர்கள் கடந்த கூட்ட கூட்டறிக்கையை வாசித்து முன்மொழிவுகளையும் வழிமொழிகளையும் பெற்று கூட்டறிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

சுகாதாரப்பிரிவின் தலைவர் Dr Rizwan அவர்கள் அனைவரையும் விழித்து வரவேற்றவராக தனது உரையை வழங்கினார். 

சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு எனும் போது சம்மாந்துறையிலே உள்ள ஒவ்வொரு சமூக சேவை அமைகளினதும் பிரதி நிதியாக ஆகக் குறைந்தது ஒவ்வொருவரையாவது பிரதி நிதிப் படுத்திக் காணப்படல் வேண்டும். அப்போதுதான் நமக்கு நமது ஊராகிய இப் பெரும் பரப்பளவிலே சுகாதாரம் சம்மந்தமான விடயங்களை இலகுவாக செயற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இதற்காக இங்கு வருகை தந்திருக்கும் ஒவ்வொருவரும் பொறுப் பெடுத்து செயற்படல் வேண்டும்.நமதூரை சுத்தமான சுகாதாரமான ஊராக மாற்ற வேண்டியது நாம் ஒவ்வொருத்தருடைய கட்டாயக் கடமையாகும்.

மேலும் உணவுப் பழக்கமும் தொற்றா நோய்களும் என்ற தலைப்பில் இன்று நாம் சில விடயங்களை கலந்துரையாடவுள்ளோம்.

நமது மக்களின் தெரியாத் தன்மையா? அல்லது ஆராய நினைக்காத சோம்பேறித் தன்மையா?? அல்லது பாவம் பார்க்கும் மன நிலையா என்னவோ தெரிய வில்லை உணவு விடயங்களில் அதீத கவயீனமாக உள்ளார்கள். நாம் இதற்கான சிறந்த தெளிவூட்டல்களை நமதூர் மக்களுக்கு வழங்க வேண்டும். 

எனவே இந்த தலைப்பிலே நாம் வவிழிப்புணர்வு நிகழ்வுகளை மக்களுக்காக கட்டம் கட்டமாக நடாத்த வேண்டும்.

சீனி, பிரசர், கொலஸ்திரோல் மட்டுமல்ல புற்று நோய்கள், சிறுநீரகம் பழுதடைதல் போன்றனவும் தொற்றா நோய்கள் தான். இவற்றுக்கும் நமது உணவுப் பழக்கங்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க வேண்டும்.

 உணவில் ருசி கூட வியாதியும் கூடும், வியாபாரி தனது வியாபாரம் தலைதூக்க ருசிக்காக நல்ல இரசாயனப் பொருட்களைச் சேர்த்து மக்களின் தலையைக் குனிய வைக்கின்றான். இதை நாம் உணர்வதில்லை.

இதுவும் முக்கியமாக விழிப்புணர்வூட்டப்பட வேண்டிய விடயமாகும்.

சுத்த மற்ற உணவுகளை இலாபமாக மக்களுக்கு வழங்குகிறார்கள் Eg: பழுதடைந்த தயிர், மீன், மரக்கறிகள், பழைய எண்ணெயை பாவித்து பொரிக்கப்பட்ட உணவுகள் ,அதிகம் உப்பு சேர்க்காப்பட்ட உணவுக ect,,,

முக்கியமான ஒருவிடயத்தை தொட்டுச் செல்லலாம் என்று நினைக்கின்றேன். நம்மில் பலரை ஆட்டிப்படைக்கும் சாப்பாட்டை சாப்பிடாமல் ஆக்கும் Gastritis என்ற நோய் பெரும்பாலும் H. Pylori என்ற பக்டீரியா கிருமித் தொத்தினால் உருவாக்கப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் சுத்தமற்ற உணவை உண்பதே ஆகும்.

எனவே நாம் சிறந்த சுகாதார குழுவாக நமதூருக்கு உணவுப் பழக்கமும் தொற்றா நோய்களும் என்ற தொணியில் விழிப் புணர்வுகளை ஏற்படுத்துவோம்.

மேலும் இறுதியாகவும் முக்கியமாகவும் தரம் A ஆக மாற்றப்பட்டிருக்கும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலையும் அதில் மக்களின் பங்களிப்பும் எவ்வாறு அமைய வேண்டும் எனவும் தொட்டுச் சென்றார். 

கௌரவ தலைவர் Kamil Imdad உரையாற்றுகையில் சுகாதாரக் குழுவின் கடந்த கூட்டறிக்கைககளை தொகுத்து ஆகக் குறைந்தது 30 சமூக சேவை அமைப்புகளுக்கும் அனுப்பி அச் சமூக சேவை அமைப்பு சார்பாக ஒவ்வொருவரை பெறும் போது அங்கத்தவர்களைக் கூட்டிக் கொள்ளலாம். 

மேலும் நமது சம்மேளனத்தின் கௌரவ செயலாளருக்கு உதவிச் செயலாளர் இடம் வெற்றிடமாக உள்ளது. எனவே அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கு பொருத்தமான ஒருவரை தெரிவு செய்ய உதவுமாறும் வேண்டினார். மற்றும் கூறுகையில் சம்மாந்துறை ஊரில் வியாபாரத்தை இஸ்லாமிய வியாபாரம் சம்மந்தமாக விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும்.இவ்விடயம் பற்றியும் சம்மேளம் செய்ய இருக்கின்றது. என்று கூறி விடைபெற்றார்.

சகோதரர் Yahya கூறுகையில் நமதூரில் சரியான திட்டமிடலில்  வியாபாரங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் தொட்டுச் சென்றார்.

கௌரவ செயலாளர் Ishak அவர்கள் கூறுகையில் அவர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புள்ளிவிபரவியலை முஸ்லிம் லீக்குக்கு வழங்க வேண்டிக் கொண்டார்.மேலும் சம்மாந்துறை பிரதேச சபை, MOH, DS Office ஆகிய மூன்றும் இணைந்து வியாபாரிகளுக்கு மருத்துவ அறிக்கை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பிரதேச சபையினூடாக ஹோட்டல்களை தரம் பிரிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. என்று கூறி முடித்துக் கொண்டார்.

இறுதியாக கௌரவ செயலாளர் Aski அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. 

*நன்றி*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *