சம்மாந்துறையில் இயங்கும் சகல,
சமூக சேவை அமைப்புகளுக்குமான
பொது அறிவித்தல்.
அன்புடையீர்,
சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் முதலாவது காலாண்டுக் கூட்டம்.
அண்மையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனம்” ஒன்று உருவாக்கப்பட்டு இவ்வூரின் சமூகநல விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றதை நீங்கள் அறிவீர்கள்.
இவ்வுன்னத பயணத்தின் முதலாவது காலாண்டின் பெறுபேறுகளை மீட்டுப்பார்க்கும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது. மேலும் இச் செயற்பாட்டை வலுவுறச்செய்ய உங்களை இச்சம்மேளனத்தின் பங்காளியாக இனம் காண்பதோடு, உங்கள் அமைப்பின் பங்களிப்பினையும் எதிர்பார்த்து நிற்கின்றது.
அந்தவகையில் எதிர்வரும் 2017.07.16 ம் திகதி இவ்வூரில் உள்ள சகல சமூக சேவை அமைப்புக்கள், சமூகசேவையாளர்கள் அனைவரையும் இப்பொதுக் கூட்டத்தில் சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது எனவே உங்கள் அமைப்பில் இருந்து 3 நிர்வாக உறுப்பினர்களை கலந்து கொள்ள செய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
இடம் : தாருஸ்ஸலாம் வித்தியாலய கேட்போர் கூடம். [சம்மாந்துறை] திகதி : 2017.07.16 – மாலை 02:00 மணிக்கு.
இவ்வண்ணம்
பொதுச் செயலாளர்
சம்மாந்துறை பிரிவு
சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனம்.
குறிப்பு : கடந்த 2017.07.16ம் திகதி தாருஸ்சலாம் வித்தியாலைய கேட்போர் கூடத்தில் நடை பெற்ற கூட்டத்தில் வருகைதந்த சகல அமைப்புகளுக்கும் விண்ணப்பபடிவம் வழங்கப்பட்டது இவ்விண்ணப்பத்தை பூரணப்படுத்தி கையளிக்காதவர்கள் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நிகழ்வன :
குறிப்பு : கடந்த 2017.07.16ம் திகதி தாருஸ்சலாம் வித்தியாலைய கேட்போர் கூடத்தில் நடை பெற்ற கூட்டத்தில் வருகைதந்த சகல அமைப்புகளுக்கும் விண்ணப்பபடிவம் வழங்கப்பட்டது இவ்விண்ணப்பத்தை பூரணப்படுத்தி கையளிக்காதவர்கள் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நிகழ்வன :
- வரவுப்பதிவு.
- மார்க்க அனுஷ்டானம்.
- வரவேற்புரை / தலைமையுரை.
- காலாண்டு கூட்ட அறிக்கை சமர்ப்பித்தல்.
- கணக்கறிக்கை சமர்ப்பித்தல்.
- இதுவரை முன்னெடுக்கப்பட்ட வேலை திட்டங்களை சமர்ப்பித்தல்.
- நோக்கம் பற்றிய விளக்கம்.
- சம்மேளனக் கட்டமைப்பு பற்றிய விளக்கம். [புதிய அங்கத்தவர்களுக்கு]
- திருத்தப்பட்ட யாப்பினை முன் மொழிதல்.
- புதிய பதவிகளுக்கு அங்கத்தவர்களைத் தெரிவு செய்தல்.
- நிர்வாகம் / உப குழுக்களுக்கான அங்கத்தவர்களை இணைத்தல்.
- சமூக சேவை அமைப்புக்களின் இயலுமை விருத்தி சம்மந்தமாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கான அறிமுகம்.
- சம்மாந்துறையினை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் சம்மேளனத்தின் sammanthurai.org எனும் இணையத்தினை அறிமுகம் செய்தல்
- சிறப்புரை – பிரதேச செயலாளர்.
- கருத்துக்கள் முன்வைத்தல்.
- நன்றி உரை.