(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
சம்மாந்துறையில் COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு
COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைக்கு SWUA க்கு எனது மனமார்ந்த நன்றி அனைத்து சமூக அமைப்புகளும் இதேபோன்ற செயல்களைத் தொடங்க வேண்டும். சம்மாந்துறையில் SWUA அமைப்பினால் வெற்றிகரமாக நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி !! முழு உலகையும் காவு கொண்டு தற்சமயம் இலங்கையையும் காவு கொண்டுவரும் கொடிய கொரோனா எனப்படும் வைரஸ் தொற்றிலிருந்து சம்மாந்துறை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தினால் (SWUA) கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று […]
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து.
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து… முப்தி யூஸுப் ஹனிபா ——————————————————– வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு. இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாது.இங்கிலாந்திலிருந்து நேரடியாக ரன்தம்பே கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து வரப்படுவோம் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எதிர்வரும் 14 நாட்கள் இந்த முகாம் வாழ்க்கை புதிய அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது.எதுவும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை. நானும் சகோதரர் ஹிஷாமும் ஏற்கனவே திட்டமிட்டமிட்டிருந்ததன் அடிப்படையில் […]
உலர் உணவு பொருட்கள் வழங்கல்
சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தினால் இன்று 2018.05.18 ம் திகதி ஒரு தொகை உலர் உணவு பொருட்கள் (பொதிகள்) வறுமை கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்கு பங்களிப்பு செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இறைவன் அருள் பாலிப்பானாக… ஆமீன் .
