(15.06.2019) இலங்கை திருநாட்டில் பெரும்பான்மை சமூகமான பௌத்த மக்களின் “பொசன்” திருவிழாவினை முன்னிட்டு சம்மாந்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வு பொலிஸ் நிலையம் , பல்கலைக்கழகம் என்பவற்றில் மிக விமர்சையாக கொண்டாடபட்டது. இவ்வைபவத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் , M.I.M மன்சூர் , கல்முனை விகாராதிபதி , உதவி பொலிஸ் அத்தியட்சகர் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நம்பிக்கையாளர் சபை தலைவர் , மஜ்லிஸ் அஸ்ஸூரா தவிசாளர் , கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி S.M.M இஸ்மாயில் அவர்களின் (செயளாளர் சட்டத்தரனி U.L.M சமீம் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் ) ஆகியோர் கலந்து மிகச் சிறப்பித்திருந்தனர் இன ஐக்கியம் , சௌஜனயம் என்பவற்றை வலியுறுத்தி முஸ்லி்ம் மக்கள் , பௌத்த மக்கள் கலந்து கொண்டமை மகிழ்ச்சியோடு வரவேற்க தக்கது.
Related Articles
சில சுய நல ஊடகங்களின் பொய் பிரச்சாரம்
சம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த 11ம் திகதி உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் முஸ்லீம் மாணவி ஒ௫வர் பர்தாவுக்குள் புளூ டூத் ஹேன் செட்டை மறைத்து வைத்துக் கொண்டு பரீட்சை எழுதுகையில் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று பிரபல இணைய ஊடகங்களில் நேற்று வெளியான செய்தி தொடர்பாக சம்மாந்துறைப் பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் இச்செய்தின் உண்மைத்தன்யை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது. அதன் பிரகாரம் இந்த செய்தியில் எந்தவிதமான உண்மையுமில்லை என சம்மாந்துறை பொலிஸ் […]
ஊரடங்கு சட்டம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வெளியில் செல்வது தொடர்பில் என்ன நிலைப்பாடு என்பது தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக காணப்படுகின்றது. நாட்டின் இறைமயைப் பாதிக்கும் ஒரு இக்கட்டான நிலை உருவாகின்ற போது அந்த நாடு அவசர கால நிலையை பிரகடனம் செய்யும். அந்த வகையில் இன்று நாட்டு சுகாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக இருப்பதால் அரசாங்கம் அவசர கால […]
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து.
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து… முப்தி யூஸுப் ஹனிபா ——————————————————– வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு. இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாது.இங்கிலாந்திலிருந்து நேரடியாக ரன்தம்பே கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து வரப்படுவோம் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எதிர்வரும் 14 நாட்கள் இந்த முகாம் வாழ்க்கை புதிய அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது.எதுவும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை. நானும் சகோதரர் ஹிஷாமும் ஏற்கனவே திட்டமிட்டமிட்டிருந்ததன் அடிப்படையில் […]
