Site icon Sammanthurai

ஊரடங்கு சட்டம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வெளியில் செல்வது தொடர்பில் என்ன நிலைப்பாடு என்பது தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக காணப்படுகின்றது.

நாட்டின் இறைமயைப் பாதிக்கும் ஒரு இக்கட்டான நிலை உருவாகின்ற போது அந்த நாடு அவசர கால நிலையை பிரகடனம் செய்யும். அந்த வகையில் இன்று நாட்டு சுகாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக இருப்பதால் அரசாங்கம் அவசர கால நிலையை பிரகடனம் செய்து இருக்கிறது.

இவ்வாறு அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள போது ஒருவர் அநாவசியமாக, தேவையில்லாமல் வெளியே சென்றால் அது ஊரடங்கு சட்ட விதி முறைகளை மீறியதாக கொள்ளப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் பிரிவு 16 க்கு அமைவாக குற்றமாக கொள்ளப்பட்டு ஒரு மாத கால சிறைத் தண்டனையும், தண்டப் பணமும் செலுத்த வேண்டி ஏற்படலாம். மேலும் இந்த சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றியும் கைது செய்யலாம்.

பொதுவாக ஒருவர் அவசிய தேவைக்கு வெளியில் செல்லலாம். ஆனால் அது தொடர்பாக முறையான ஆதாரங்கள் காட்டப்படல் அவசியமாகும். மேலும் இந்த நேரத்தில் போலீசார் சந்தேகப்பட்டால் எம்மை கைது செய்ய முடியும் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். எனவே அவசிய காரணத்துக்காக மட்டுமே நான் வெளியில் செல்ல வேண்டும் என்பதை நினைவிற் கொள்ளவும்.

எனவே அவசர தேவை அல்லாமல் வெளியில் திரிவதை இயன்றளவு குறைத்துக் கொள்வோம்.

இயாஸ்தீன்
சட்டத்தரணி

Exit mobile version