Site icon Sammanthurai

மாவட்ட கலந்துரையாடல் [ 2017.11.02 ]

இன்று [ 2017.11.02 ] அம்பாரை மாவட்டத்தில் உள்ள சகல சிவில் அமைப்புக்களையும் உள்ளடக்கிய மாவட்ட கலந்துரையாடல் நடை பெற்றது. இதன் போது சம்மேளனத்தின் சார்பாக அதன் நிர்வாக உத்தியோகத்தர்களும் 13 உப குழுக்களின் தலைவர்களுமாக 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சம்மேளனத்தின் சார்பாக அதன் தலைவர் சில பரிந்துரைகளை presentation மூலமாக முன்வைத்தார்.

இதன் போது சில முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன…

  1. பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டங்களில் உத்தியோக பூர்வமாக கலந்து கொள்ளல்.
  2. பிரதேச சம்மேளன தலைவர்கள் வருடத்துக்கு இரு முறை தேசிய ரீதியில் கலந்துரையாடல்.
  3. பிரதேச சிவில் அமைப்புகளுக்கான அலுவலகம் உருவாக்கல்.
  4. சம்மாந்துறை பிரதேச சமூக அமைப்புக்களுக்கான உத்தியோக பூர்வமான பதிவினை தேசிய செயலகத்தில் பதிவு செய்தல்.
  5. சமூக அமைப்புக்களுக்கு அவசியமான மூன்று முக்கிய பயிற்சிகள் வழங்கல் அவ்வமைப்புகளை வலுவுறச் செய்தல்.
  6. சமூக அமைப்புகளை கௌரவித்தல் / விருதுகள் வளங்கள் சம்மந்தமான விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பு :

1. இந்நிகழ்வின் புகைப்படங்களை சம்மேளனத்தின் உத்தியோக பூர்வ இணையத்திலும் அதன் முக நூலிலும் பார்வையிடலாம். சம்மாந்துறை பிரதேச சமூக அமைப்புக்களின் சம்மேளனம் என்பது இவ்வூரினுடைய மிகப்பெரும் வளமாகும். அந்தவகையில் இதனுடன் இணைந்து செயலாற்ற இதுவரை சந்தர்ப்பம் கிடைக்காத அமைப்புகள் இதன் நோக்கம் பற்றி நமது இணையத்தில் தெரிந்து கொள்ள முடியும். இணைந்து செயலாற்ற விரும்புவர்கள் இந்த link ஊடாக பதிவு செய்து கொள்ள முடியும். அல்லது தொடர்பு கொள்ளவும்

Exit mobile version