Site icon Sammanthurai

வரலாற்றில் முதல் முறை ஜும்மாஹ் தொழுகை இல்லை.

2019 டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரானா வைரஸ் [கோவிட்19] பரவலின் வெளிப்பாடாக உலகில் இதுவரை [20.03.2020]  246,467 மக்களை பீடித்து உள்ளதுடன் அது 10,049 மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இலங்கையில் அதன் தாக்கம் உருவானது இது இன்று [20.03.2020] ம் திகதியுடன் 70 நபர்களை இலங்கையில் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதன் காரணமாக பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் அனைத்தும் அரசினால் தடை செய்யப்பட்டது.

அந்த வகையில் முஸ்லிம் பள்ளிவாயல்கள் அனைத்தும் மூடப்பட்டு தொழுகைகளை வீட்டில் தொழும் படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னணியில் இன்று [20.03.2020] ம் திகதி முதலாவது ஜும்மாஹ் தொழுகை நாடு பூராகவும் நிறுத்தப்பட்டு வீட்டில் தொழும்படி கேட்டு கொள்ளப்பட்டது.

வரலாற்று எழுத்தாளர்களின் தகவலின்படி இதுவே இலங்கை முஸ்லீம்கள் வெள்ளிக்கிழமை ஜும்மாஹ் தொழுகைக்கு செல்லாத முதல் சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது.

ajki – Sammanthurai

Exit mobile version