மருத்துவ துறையில் சம்மாந்துறையில் MD பட்டம்
பொதுவாக மருத்துவ துறையில் special முடிப்பவர்களை MD பட்டம் கிடைத்ததாக சொல்வார்கள். சம்மாந்துறையில் நான் அறிந்து முதலாவது MD முடித்தவர் Dr M.S. Ibra Lebbe (Consultant Community Physician), அதன் பின்னர் பலர் Eg: Dr. Faseena ( MD in Paediatrics – Consultant paediatrician) Dr. I.L.M.Safeer ( MD in Paediatrics – Consultant paediatrician & community paediatrics) Dr. Asfir (MD in Critical Care Medicine) Dr. […]
இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள்.
இக் கால கட்டத்தில் வாழ்பவர்கள். +++===+++by:ajki===+++===+++ 2ம் உலக போரின் போது வாழ்ந்தவர்கள் போலியோ காலத்தில் வாழ்ந்தவர்கள் 79ம் ஆண்டு சூறாவளின் போது வாழ்ந்தவர்கள். ஜூலை கலவரத்தில் வாழ்ந்தவர்கள் JVP கலவரத்தில் வாழ்ந்தவர்கள் யுத்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இன பிரச்சனையின் போது வாழ்ந்தவர்கள் சுனாமியின் போது வாழ்ந்தவர்கள் வெள்ள காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்று கொறோனா காலத்தில் வாழ்பவர்கள் !!! நம்பிக்கையே வெற்றியின் ரகசியம் !!!
உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு
ஊர் மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (26.03.2020) சிறப்பாக இடம்பெற்றது. நாட்டின்அனைவரினது மத்தியிலும் அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட் -19 எனும் ( கொரோனா) தொற்று நோயினால் நாளுக்கு நாள் இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் உயிர் சேதங்கள் இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் சம்மாந்துறை பிரதேச மக்களின் நலன் கருதி சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் இன்று வறிய மக்களுக்கு உலர் […]
சம்மாந்துறையில் COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு
COVID 19 ஐ குறிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைக்கு SWUA க்கு எனது மனமார்ந்த நன்றி அனைத்து சமூக அமைப்புகளும் இதேபோன்ற செயல்களைத் தொடங்க வேண்டும். சம்மாந்துறையில் SWUA அமைப்பினால் வெற்றிகரமாக நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி !! முழு உலகையும் காவு கொண்டு தற்சமயம் இலங்கையையும் காவு கொண்டுவரும் கொடிய கொரோனா எனப்படும் வைரஸ் தொற்றிலிருந்து சம்மாந்துறை மக்களை பாதுகாக்கும் நோக்கில் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தினால் (SWUA) கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று […]
முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்தார்.
சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபர் ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக இலங்கையில் முதலில் அடையாளம் காணப்பட்டடார், அவர் இன்று 23.03.2020 ம் திகதி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையிலிருந்து அவர் இன்று வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து.
கொரோனா நோய்க் கண்காணிப்பு முகாமிலிருந்து… முப்தி யூஸுப் ஹனிபா ——————————————————– வாழ்க்கை ஒரு விநோதமான விளையாட்டு. இறைவனின் நாட்டம் என்பது எப்படி அமையுமென்று என்று எம்மால் ஒருபோதும் கற்பனை செய்ய முடியாது.இங்கிலாந்திலிருந்து நேரடியாக ரன்தம்பே கண்காணிப்பு முகாமிற்கு அழைத்து வரப்படுவோம் என்று ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. எதிர்வரும் 14 நாட்கள் இந்த முகாம் வாழ்க்கை புதிய அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது.எதுவும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்பது ஒரு முஸ்லிமின் நம்பிக்கை. நானும் சகோதரர் ஹிஷாமும் ஏற்கனவே திட்டமிட்டமிட்டிருந்ததன் அடிப்படையில் […]
ஊரடங்கு சட்டம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது வெளியில் செல்வது தொடர்பில் என்ன நிலைப்பாடு என்பது தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக காணப்படுகின்றது. நாட்டின் இறைமயைப் பாதிக்கும் ஒரு இக்கட்டான நிலை உருவாகின்ற போது அந்த நாடு அவசர கால நிலையை பிரகடனம் செய்யும். அந்த வகையில் இன்று நாட்டு சுகாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக இருப்பதால் அரசாங்கம் அவசர கால […]
சம்மாந்துறையில் இன்று
இன்று 20.03.2020 மாலை 06 மணிமுதல் திங்கட்கிழமை (23) காலை 06 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக சந்தைகளில் அலை மோதினர். இதன் போது எடுக்கப்பட்ட படங்கள்.
மன்சூரின் வேட்புமனு கையளிப்பு.
இன்று காலை, திகாமடுல்ல மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி வேட்பாளர் முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவினை கையளிப்பதற்கு முன்னர் தனது அலுவலகத்தில் துவா பிரார்த்தனைகளுடன்.
மாஹிர் அவர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் சம்மாந்துறைத் தொகுதி வேட்பாளராக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ எல் எம் மாஹிர் அவர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.