Federation

Divisional Council of Civil Society Organizations – Sammanthurai

Facebook pagePhotos

This Council is Established in 2017.

சிவில் சமூக அமைப்புகளின் பிரதேச சம்மேளனம் – சம்மாந்துறை

ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அச் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களையும் அவர்கள் ஒன்றிணைந்த அமைப்புகளையும் சாரும். அவ்வாறான சமூகவியலாளர்களும் அமைப்புகளும் நிறைந்து காணப்படுவது நமதூரின் சிறப்பம்சமாகும். அவ்வாறான சிறப்பம்சம் கொண்ட நமதூரில் எட்டப்பட வேண்டிய முன்னேற்றத்தில் சற்று தாமதம் தென்படுவது உண்மையே !

 

அவ்வாறாயின் அதன் சமூகவியலாளர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகின்றது. அந்த வகையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சிவில் சமூக அமைப்புகளின் பிரதேச சம்மேளனம்” ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டு இவ்வூரின் சமூக அமைப்புகளினால் ஒன்றிணைந்த மாற்றத்தை நோக்கிய ஒரு புதிய பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சம்மேளனத்தின் தேவைப்பாடு …

  1. மக்களினால் முன்னெடுக்கக்கூடிய ஓர் மண்றத்தினை உருவாக்குதல்.
  2. ஓர் சிறந்த அறிவூட்டப்பட்ட சமுதாயத்தினை கட்டியெழுப்புதல்.
  3. பரந்து பட்ட கருத்துக்களை ஓர் இடத்தினில் முன்வைத்தல்.
  4. இவ்வூரின் உண்மையான தேவைகளினை அனைவரும் ஒருமித்த வகையில் இனம் காணல் அல்லது முன்வைத்தல்.
  5. ஒன்றிணைந்த அபிவிருத்தியினை மேட்கொள்ளல் !!!
  6. வதந்திகள் அற்ற ஓர் செய்தி / விடயம் மக்களிடையே சென்றடைதல்.

சம்மேளனத்தினால் இவ்வூருக்கு கிடைக்கும் நன்மைகள்.

  1. சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றினைவதால் சிவில் சமூகத்தின் பலத்தினை நிரூபித்தல்.
  2. பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு தனி ஒரு அமைப்பால் மட்டும் தீர்வுகளைக் காண்பதில் சிக்கல்களை எதிர்நோக்குவதால் சம்மேளனத்தின் ஊடாக வெற்றிகாணல்.
  3. அங்ககத்துவ அமைப்புகளின் ஊடாக திறந்த கலந்துரையாடல் களத்தினை உருவாக்கல்.
  4. அமைப்புக்களிடம் உள்ள அனுபவங்களை பகிர்ந்துகொள்வதின் ஊடாக சிறந்த அபிவிருத்திகளை திட்டமிடல்.
  5. இதன் மூலம் பிரதேச மட்டத்தில் சிறந்த அபிவிருத்தி திட்டமிடல்களை மேற்கொள்ளல்.
  6. சமூக வலுவூட்டல்களை மேட்கொள்வத்தின் ஊடாக சிறந்த அறிவூட்டப்பட்ட சமூகம் ஒன்றினை கட்டி எழுப்புதல்.
  7. பிரதேச மட்டத்திலுள்ள சிவில் சமூக அமைப்புக்களை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் சிவில் சமூக எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் எடுத்துரைத்தாலும், மாவட்ட அபிவிரித்திக்குழு பிரதிநித்துவமும்.
  8. சமூக மட்ட குழுக்களை ஒன்றினைத்து பயிற்சிகள் வழங்குவதும் அதன் ஊடாக இயலளவை அதிகரித்து செயற்திரன்மிக்க அமைப்புகளாக மாற்றுதல்.
  9. வதந்திகள் அற்ற ஒரு செய்தியினை இவ்வூருக்கு கொண்டு செல்லல்.
  10. சம்மேளனத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள்.

அமைக்கப்பட்டுள்ள குழுக்கள்.

  1. வாழ்வாதர அபிவிருத்தி.
  2. கல்வி, கலாச்சார அபிவிருத்தி.
  3. சுகாதார அபிவிருத்தி.
  4. பெண்கள் அபிவிருத்தி.
  5. விவசாய அபிவிருத்தி.
  6. அனர்த்த முகாமைத்துவம்.
  7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
  8. போதைப்பொருள் மதுசாரம் தடுத்தல்.
  9. சகவாழ்வு.
  10. அமைப்புகளின் இயலுமை வருத்தி.
  11. சிறுவர் அபிவிருத்தி.
  12. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள்.
  13. இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி.

பின்னணி …

இவ்  இலங்கை  நாட்டின்  தனக்கென  ஓர்  சிறப்பை வளர்த்து வரும்  ஊராக  நமது  சம்மாந்துறை  விழங்குகின்றது.  இவ்  முன்னேற்றத்திற்கு பங்காற்றியவர்களை  இவ்விடத்தில்  நினைவு கூருவாவதோடு  இம்மக்களுக்கும் நன்றியினை அளிக்கின்றோம்.

நமது  ஊரின்  பல முக்கிய துறைகளில் உயர் பதவிகள் வகிப்பவர்களும்  நம்   மத்தியில்  உள்ளனர். இவ்வாறான  நிலையில்  இத்துறை   சார்ந்தவர்களும் சமூக சேவையில்  ஈடுபடும் பொதுமக்களும்  ஏனையவர்களும்  ஓர்  இடத்தில் சங்கமிப்பது நடைபெறாத நிலையே உள்ளது.  மேலும்   எதிர்கால   சந்ததியினர்   இப்பதவிகளையூம்,  இவ்வேலைத் திட்டங்களையும்  தன்னகர்த்தே  ஈர்த்துக்   கொள்வதற்கும்  அனுபவ பகிர்வை பகிர்ந்து கொள்வதற்கும் கிட்டாத நிலையே ஏற்படுகின்றது.

இவ்வாறான துறை சார்ந்தவர்கள் ஓர் அங்கமாக இருக்க மற்றுமோர்  பொறுப்பை சுமர்ந்தவர்களும்  நம் மத்தியில் உள்ளனர். அதாவது நமது ஊரின் மிகப்  பெரும்  வளமாக   பாடசாலை  நிறைவூ  காலத்தில்  இருந்து  ஓய்வூ பெற்றவர்கள்  வரை சுமாராக 300 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புக்கள் (சங்கம்) நம்மத்தியில் உள்ளன.

இவை   அனைத்தும்   பாரிய    அர்த்தம்   உள்ள,  மற்றவர்களை கவர்ந்த வகையில் அதனுடைய பெயர்களை (“சமூக சேவை  அமைப்பு” என்றும், சமூக மேம்பாடு அமைப்பு” என்றும்,  “நண்பர்கள்  ஒன்றியம் என்றும்”)   சூட்டியுள்ளனர்.  ஆனால்   பெரும்பாலான அமைப்புகள்   அதன்   சமூக   பணியை முழுமைப்படுத்தாத நிலையில் காணப்படுகின்றமை உண்மையே!  இதற்கு  ஓர்  சிறந்த  வழிகாட்டல்  இன்மையே காரணமாக அமைகின்றது.

இவ்வாறான  சகல  விடயங்களையூம்  நாங்கள்  பேச்சளவில்  நின்றுவிடாது  இதற்காக செயல்ரீதியில்   செயற்பட   முன்   வர   வேண்டியது   நமது கடமையாகின்றது. எனவே  இவ்விடயங்களை   எவ்வாறு   நிவர்த்தி   செய்யலாம்  என  நாம் பார்க்கும் போது  பின்வரும்   விடயங்களின்   ஊடாக   நமது இலட்சியங்களை  அடைந்து கொள்ள முடியும்.

 

சம்மேளனத்தின் தேவைப்பாடு …

  1. மக்களினால் முன்னெடுக்கக்கூடிய ஓர் மண்றத்தினை உருவாக்குதல்.
  2. ஓர் சிறந்த அறிவூட்டப்பட்ட சமுதாயத்தினை கட்டியெழுப்புதல்.
  3. பரந்து பட்ட கருத்துக்களை ஓர் இடத்தினில் முன்வைத்தல்.
  4. இவ்வூரின் உண்மையான தேவைகளினை அனைவரும் ஒருமித்த வகையில் இனம் காணல் அல்லது முன்வைத்தல்.
  5. ஒன்றிணைந்த அபிவிருத்தியினை மேட்கொள்ளல் !!!
  6. வதந்திகள் அற்ற ஓர் செய்தி / விடயம் மக்களிடையே சென்றடைதல்.

 

இலக்கு…

  • ஓர் சிறந்த கல்வியூற்பட்ட சமூகமாக மாறுதல்.
  • சம்மந்துறையில் காணப்படும் சகல துறைசார் உயர் பதவி வகிப்பவர்களையூம் சமூகமட்ட குழுக்களையூம் (சங்கங்கள்) ஒன்றினைத்தல்.
  • இக்குழுக்கள் சமூக எழுச்சிகளாக செயற்படல்.
  • இவ்வூரின் அபிவிருத்தியினை ஒன்றிணைந்த ரீதியில் மேட்கொள்ளல் !!!
  • சம்மாந்துறையில் அமையப்பற்றிருக்கும் ஒவ்வொரு துறையினரையூம் ஒன்றினைத்தல்.
  • சங்கங்களின் பிரதினுபத்தினை வலுவுறச் செய்தல்.
  • சமூக ஆய்கவுளை மேற்கொள்ளுதல்.
  • இவ்வூரின் சமூக நல பொது விடயங்கள், செய்திகள் மற்றும் தேவைகள் இம்மன்றத்தின் ஊடாக உண்மைபப்டுத்தப்பட்டு வழங்கப்படல்.
  • இவ்வுரிற்க்கென தனியான ஓர் இனையத்த தளம் ஒன்றினை உருவாக்கள். [sammanthurai.org]
  • துறைசார் விருதுகள் வழங்கள்.

 

வாழ்வாதார அபிவிருத்தி உபகுழுவின் செயற்பாடுகளின் அளவுகோல்கள்

வறுமையிலிருந்து மக்களை விடுவிப்பதே அபிவிருத்தியின் பிரதான நோக்காகும். வறுமை என்பது பொருளாதார ரீதியான வறுமை, சமூக ரீதியான வறுமை போலவே உளரீதியான வறுமை போன்றனவாகும். கூடுதலாக நுண்நிதி முறை மற்றும் நுண்நிதிக் கடன் திட்டத்தின் மூலம் வறுமையை ஓழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதற்கமைய கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை அடிப்படையாக கொண்டு பிரதேசத்தில் வாழ்வாதார விருத்திவேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.

  • வறுமைப்பட்ட குடும்பங்களை இனங்காணலும் அந்தக் குடும்பங்கள் வறுமைக் கோட்டிலிருந்து விலகிச் செல்லும் விதம் அதிகரித்தல்.
  • பிரதேசத்தில் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை ஆரம்பிக்கும் அளவும் பதிவு செய்யப்படும் அளவும் அதிகரித்தல்.
  • கிராம அலுவலர் பிரிவில் சுயதொழில் ஆரம்பிக்கும் அளவு அதிகரித்தல்.
  • வாழ்வாதார விருத்தி மற்றும் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும்
    அதிகரித்தல்.
  • சுயதொழிலில் ஈடுபடுபவர்கள் ஓன்றிணைந்து செயற்படுவதும் வலையமைப்பாக இயங்குவதும் அதிகரித்தல்.
  • பிரதேச செயலகப் பிரிவில் வாழ்வாதார இணைப்புப் பொறிமுறை விரிவாக்கமடைதல்.
  • சுயதொழிலில் ஈடுபடுபவர்களுடையதும், சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுடையதும் உற்பத்திகளுக்கு சந்தைப்படுத்தல் வசதி விரிவாக்கமடைதல்.
  • உற்பத்திச் செயன்முறையில் புதிய தொழிநுட்பக் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பாவனை செய்யும் விதம் அதிகரித்தல்.
  • புதிய விற்பனை நிலையங்களை ஆரம்பித்தல் அதிகரித்தல்.
  • வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்தலும், நுண்நிதி மற்றும் நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் பதிவு செய்யும் விதம் அதிகரித்தல்.
  • வறுமைப்பட்ட குடும்பங்களிலும் சமூகத்திலும் சேமிப்பின் அளவு அதிகரித்தல்.
  • வாழ்வாதார விருத்திக்காக பயன்படுத்தும் மூலப்பொருட்களின் கொடுப்பணவு அதிகரித்தல்.

மது போதைப்பொருள் தடுப்பு உபகுழுவின் செயற்பாடுகளின் அளவுகோல்கள்

மதுசாரம், சிகரட் உட்பட்ட போதைப்பொருட்களின் பாவனையால் ஓரு கிராம அலுவலர் பிரிவிலிருந்து
வருடாந்தம் ஓரு கோடி ரூபாய்களுக்கு அதிகமாக செலவாவதுடன். ஆவற்றின் பாவனையால் சுகாதார
ரீதியானதும் சமூக ரீதியானதுமான பாதிப்புக்கள் மிகவும் அதிகமாகும். அதற்கமைய மாவட்டத்திலுள்ள
சிறுவர்களும் இளைஞர்களும் இவற்றின் பாவனைக்கு உட்படுவதைத் தடுப்பதற்கும் பாவனை
செய்பவர்களிடையே அவற்றின் பாவனையைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் வேலைத்திட்டத்தை
நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் அவ்வாறான வேலைத்திடடத்தை கீழ்வரும் அளவுகோல்களை
உபயோகித்தல் பயனுள்ளதாகும்.

  • மதுசாரம், சிகரட் உட்பட்ட போதைப்பொருட்களின் பாவனையால் ஏற்படும் செலவு, அவற்றின் பாவனையால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் கவனம் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.
  • மதுசாரம், சிகரட் உட்பட்ட போதைப்பொருட்களின் பாவனை அருவருப்பான, வெறுக்கத்தக்க அசௌகரியமான அனுபவம் என்பதை விளங்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.
  • மதுசாரம் சிகரட் உட்பட்ட போதைப்பொருட்களின் பாவனைக்கு பழக்கப்பட்ட பின்னர் வாழ்க்கையில் சந்தோசம் மட்டுப்படுத்தப்படும் என்பதை விளங்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.
  • மதுசாரம் மற்றும் போதைப்பொருட்களின் பாவனையின் பின்னர் காட்டும் வீணான நடத்தைகள் யாவும் வெறும் பொய் நாடகங்கள் என்பதை விளங்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.
  • மதுசாரம் மற்றும் போதைப்பொருட்களின் பாவனையின் பின்னர் காட்டும் வீணான பொய் நாடகங்களுக்கு அனுமதியோ மன ;னிப்போ வழங்காதலர்களின் எண்ணிக்கை அதிகாரித்தல்.
  • மதுசாரம், சிகரட் உட்பட்ட கம்பனிகளின் உபாயங்கள் மற்றும் தந்திரங்கள் பற்றிய தௌிவு கொண்டவர்களுக்கும் அவற்றுக்கு எதிர்ப்புக் காட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.
  • மதுசாரம், சிகரட் உட்பட்ட போதைப்பொருட்களின் பாவனையுடன் பிணைந்துள்ள பிழையான
    எதிர்பார்ப்புக்களை அறிந்துள்ளவர்கள் மற்றும் அவ்வாறான பிழையான எதிர்பார்ப்புகளுக்கு சவால்
    விடுபவர்களின் எண்ணிக்கை அதிகாரித்தல்.
  • மதுசாரம், சிகரட் உட்பட்ட போதைப்பொருட்களின் பாவனையைக் குறைந்தவர்கள் அல்லது நிறுத்தியவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
  • சிகரட் மற்றும் புகைப்பொருட்களின் விற்பனையை நிறுத்திய வியாபார நிலையங்களின் எண்ணிக்கை.
  • மது போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டங்களைத் தமது வருடாந்த திட்டவரைபில் சேர்த்துக்கொண்ட சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் அதிகாரித்தல்.
  • விருந்துபசாரங்களிலும், கொண்டாட்டங்களிலும் மதுசார, சிகரட் புகையிலைப் பொருட்கள் வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் குறைவடைதல்.

பெண்கள் அபிவிருத்தி தொடர்பான உபகுழுவின் செயற்பாடுகளின் அளவுகோல்கள்

பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைவடைவதுடன் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சாதாரணத்துவம் கிடைக்கும் வகையிலான நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தல் இந்த உபகுழுவின் பணியாகும். மேலும் மாவட்டத்தில் சமூகமட்டத்திலுள்ள குடும்பங்களில் சந்தோசம் அதிகரிப்பதுடன் “ஆரோக்கியமானதும் சந்தோசமானதுமான குடும்பம்” எனும் தொனிப்பொருளில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல். ஆண் பெண் பால்நிலைச்சமத்துவம் பற்றியுள்ள பிழையான சமூகக் கற்கைகளை நிவர்த்தி செய்வதும் உபகுழுவின் நோக்கமாகும். அதற்காக கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களைப் பயன்படுத்தி வேலைத்திட்டங்களை சமூகமட்டத்தில் செயற்படுத்தலாம்.

  • பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைப்பதற்கும், பெண்களை வலுப்படுத்துவதற்குமான நிகழ்ச்சித்திட்டங்களும் செயற்குழுக்களுடன் கூடிய கிராமங்கள் அதிகரித்தல்.
  • ஆண்மை பெண்மை எனும் சமூக எண்ணத் தோற்றப்பாட்டை சவாலுக்குட்படுத்தி மனிதாபிமானம் என்பதை மேலோங்கச் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகாரித்தல்.
  • ஆரோக்கியமானதும் சந்தோசமானதுமான குடும்பங்கள் வேலைத்திட்டக் கிராமங்களில் அதிகரித்தல்.
  • கணவன் மனைவிக்கிடையிலான தொடர்புகளை அதிகரிக்கும் வகையிலான இணைகளுக்கிடையிலான இரசனைமிக்க நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் சமூகங்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.
  • பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் சட்ட உதவி தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்கள் அதிகரித்தலும் அவற்றிற்குப் பங்கு கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
  • இளைஞர், யுவதிகளுக்கான ஆண் பெண் பால்நிலைச் சமத்துவம், இனவிருத்திச் சுகாதாரம், தொழிநுட்ப அறிவு, தலைமைத்துவப் பறிற்சி மற்றும் ஆளுமை விருத்திப் பயிற்சி நிகழ்ச்சிகள் அதிகரித்தல்.
  • பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் குறைப்பதற்கும், ஆண் பெண் பால்நிலைச் சமத்துவம், மற்றும் இளைஞர்களை இணைத்து ஆண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையிலான சமூகச் செயற்பாடுகள் அதிகரித்தலும் பங்குபற்றும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தலும்.
  • பெண்களுக்கான உளநல ஆலோசனை வழிகாட்டல் நிகழ்சித்திட்டங்கள் அதிகரித்தல்.
  • வீட்டு வன்முறைகளும் பெண்கள் வன்முறைகளும் குறைவடைதல்.
  • பெண்கள் சுயதொழில்களை ஆரம்பித்துச் செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல.
  • மாவட்டத்திலுள்ள குடும்ப அலகுகளில் சந்தோசமும் அன்பும் விருத்தியடைவதற்காக.
  • குடும்பம் என்ற ரீதியில் வெளிச் செயற்பாடுகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்கள் அதிகரித்தல்.
  • குடும்பத்தில் ஆண் அங்கத்தவர்கள் வெளிச் செயற்பாடுகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்கள் அதிகரித்தல்.
  • குடும்பத்தில் ஆண் அங்கத்தவர்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுக்கும் அளவு அதிகரித்தல்.
  • குடும்பத்தில் சரியான தொடர்பாடல் மற்றும் பயன்மிக்க கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் அதிகாரித்தல்.
  • பிள்ளைகளின் முன்னேற்றம் மற்றும் திறமைகள் தொடர்பாக தாயூம் தந்தையூம் சேர்ந்து சந்தோசத்துடன் எடுத்துக்கூறும் தடவைகள் அதிகரித்தல்.
  • குடுமபத்தில் முடிவுகள் எடுக்கும் வேளைகளில் பெண்களுக்கும் கலந்துகொள்ளக்கூடிய தடவைகள் அதிகரித்தலும்இ ஓருவருக்கொருவர் உறுதிசெய்வதும் அதிகரித்தல்.
  • குடும்பத்தில் வீட்டு முகாமைத்துவம் முன்னேற்றமடைதல்.
  • மதுசாரம் சிகரட் மற்றும் போதைப்பொருட்களின் பாவனையுடன் தொடர்புபட்ட செலவுகள் துன்பங்கள் குறைவடைதல்.

சிறுவர் அபிவிருத்தி உபகுழுவின் செயற்பாடுகளின் அளவுகோல்கள்

பிரதேசத்திலுள்ள சிறுவர்களின் பாதுகாப்பை நிலைநாட்டுவதுடன், அவர்களின் உரிமைகளை
பாதுகாப்பதோடு சிறுவர்களின் உடல், உள ரீதியான கல்வி ரிதியான விருத்திக்கு அவசியமான
நிகழ்ச்சிதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதே இவ்உபகுழுவின் பணியாகும். அதற்காக
கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களை பயன்படுத்தி வேலைத்திடங்களை சமூகமட்டத்தில்
செயற்படுத்தலாம்

  • சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான அறிவுபெற்றவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரித்தல்.
  • சமூக மட்டத்திலான சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமங்கள் அதிகரித்தல்.
  • வீட்டில், வீதியில் பாடசாலையில், அல்லது வேறு இடங்களில் சிறுவர்களுக்கு ஆபத்தான நிலைமைகளை இனங்காணலும் அவை குறைவடைதலும்.
  • சிறுவர்கள் மீது இடம்பெறும் சகலவிதமான வன்முறைகளும் துன்புறத்தல்களும் குறைவடைதல்.
  • சிறுவர்களின் உடல் உள சமூக மற்றும் கல்வி ரீதியிலான விருத்தியை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுடன் கூடியதாக இயங்கும் சிறுவர் கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்தலும் பங்கு கொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்தலும்.
  • குடும்பத்திலும் சமூகத்திலும் சிறுவர் பங்குபற்றலை அதிகரித்தலும் அதனை உறுதி செய்தலும்.
  • பாடசாலை விலகல், சிறுவர் தொழிலாளர், வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவடைதல்.
  • சிறுவர்களுக்கான தலைமைத்துவம், ஆளுமை விருத்தி, முதலுதவியூம் பாதுகாப்பும், வெளிக்களச் செயற்பாடுகள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள், குழச்செயற்பாடுகள், தொண்டர் சேவை, சுழல் பாதுகாப்பு, வெற்றிகரமான கற்றல் முறை, ஆன்மீக விருத்தி, போன்ற விடயங்களில் நிபுணத்துவத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளும் நிகழ்சிதிட்டங்களும் அதிகரித்தல்.
  • 0-5 வயதுடைய பிள்ளைகளுக்கு வீட்டிலேயே கற்றலை பெற்றுக்கொடுத்தல் தொடர்பாக பெற்றௌர்களின் திறன்களை விருத்தி செய்தலும் அவற்றில் ஈடுபடும் பயன்மிக்க சந்தர்ப்பங்கள் அதிகரித்தல்.
  • தரத்துடன் கூடிய சிறந்த குணவிருத்திக் கல்வியைப் பெற்றுக் கொடுக்க கூடிய முன்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல்.

சுகாதாரக் குழு

“சுகாதாரம் தான் அழியாத செல்வம்” என்று ஓரு பழமொழி ஆங்கிலத்தில் உண்டு. எவ்வளவு செவ்வமும் ஆளனி உடமைகளும் இருந்தாலும் நோய் பீடித்தால் வாழ்வு நரகமாகிவிடும். நாம் யாவரும் அனுபவத்தில் கண்ட உண்மை இது. எனவே சகல மக்களிடையேயூம் சுகாதாரமான வாழ்வு பற்றிய அறிவை ஏற்படுத்துவது முக்கியமான செயற்பாடாகும். அது சம்பந்தமாக நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளாக:

  • நல்வாழ்வை வாழ்நாள் முழுவதும் நிலைநிறுத்தக் கூடிய உணவு வகைகள் பற்றிய அறிவையும் அவற்றைத் தயாரிப்பதற்குமான அறிவை ஏற்படுத்தல்.
  • ஓரு நாளைக்கு 10-15 நிமிடங்களாவது உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வற்புறுத்த வேண்டும்.
  • Prevention is better then cure என்பதன் தாற்பரியத்தை நன்கு உணர்த்த வேண்டும்.
  • தற்போது இரசாயன உரம் பாவித்து உற்பத்தி செய்யப்படும் காய்கறிவகைகளை முடிந்த அளவு தவிர்க்க அல்லது, நன்கு சுத்தம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தல்.
  • வீட்டில் இடம் இல்லாவிட்டால் புச்சாடிகளிலாவது காய்கறிவகைகளை முடிந்த மட்டில் வளர்த்து ஊக்குவித்தல்
  • மலசலகூடம், கிணற்று நிர், வீட்டுச்சுற்று சுழல் ஆகியவற்றை துப்பரவாக வைத்திருக்க அறிவூட்டல்.
  • குப்பை கூழங்களை நவீன முறைப்படி அகற்ற அறிவுறுத்தல், வசதிகளும், முடிந்தால் செய்து கொடுத்தல்.
  • மிக முக்கியமாக எமது சிறார்களின் பழக்க வழக்கங்களை முனைப்பாக அவதானித்து நற்சுகாதார
    முறைகளை கடைப்பிடிக்க உதவுதல்.
  • நுளம்பு, கிருமி ஆகியவை பெருக்கமடையாது தவிர்க்க ஆவண செய்தல்.
  • தேவைப்படின் எந்த நேரத்திலும் சுகாதார பரிசோதனைகளின் (PHI) உதவியை நாட வழிவகுத்தல்.