News

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து கடந்த 2017.10. 01 ம் திகதி உலக சிறுவர் தின நிகழ்வை மிக கோலாகலமாக நடாத்தியது. இந்நிகழ்வில் பங்குபற்றிய சகல பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு விழிப்பூட்டல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 2018.01. 12 ம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வினை சம்மேளனத்தின் சிறுவர் அபிவிருத்தி குழு தலைவரான ஜனாப் MM. வாஹிட் […]

News

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு குடி நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு குடி நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், 2018-01-06 ஆம் திகதி மக்களின் சுகாதார நலன்புரி அமைப்பினால் ( Well Wishers Of BH/Str) அன்பளிப்பு செய்யப்பட்டது. சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் நலன் விரும்பிகளால் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இயங்கிவரும் சம்மாந்துறை மக்களின் சுகாதார நலன்விரும்பி அமைப்பினால் வெளி நோயாளர் பிரிவு, கிளினிக் ஆகிய இடங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சுத்தமான நீரை அருந்த வேண்டும் என்ற நோக்கில் இரண்டு நீர் […]

News

சம்மாந்துறை பிரதேச சிவில் அமைப்புக்களின் மாதாந்த கூட்டம் (2017/12/17)

சம்மாந்துறை பிரதேச சிவில் அமைப்புக்களின் மாதாந்த கூட்டம் நேற்று (2017/12/17) நடைபெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் ஜனாப் SL. ஹனிபா அவர்களும் கலந்து கொண்டார். பல ஆக்கபூர்வமான முடிவுகள் சமூகம் சார்ந்து எடுக்கப்பட்டது.

News

தேசிய ஒன்று கூடல்

தேசிய அங்கிகாரம் பெற்ற பிரதேசத்துக்கான ஒரே ஒரு சம்மேளனத்தின் தேசிய ஒன்று கூடல் இன்று நடைபெற்றது. இதன் போது பல தீர்மாணங்களும் நிறைவேற்றப்பட்டது. பொறுப்புள்ள தன்னார்வளர்களும் , சமூக அமைப்புக்களும் சம்மேளத்துடன் கைகோர்த்து வெற்றி நடை போட சம்மேளனத்துடன் இணையுங்கள்…

News

மாவட்ட கலந்துரையாடல் [ 2017.11.02 ]

இன்று [ 2017.11.02 ] அம்பாரை மாவட்டத்தில் உள்ள சகல சிவில் அமைப்புக்களையும் உள்ளடக்கிய மாவட்ட கலந்துரையாடல் நடை பெற்றது. இதன் போது சம்மேளனத்தின் சார்பாக அதன் நிர்வாக உத்தியோகத்தர்களும் 13 உப குழுக்களின் தலைவர்களுமாக 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சம்மேளனத்தின் சார்பாக அதன் தலைவர் சில பரிந்துரைகளை presentation மூலமாக முன்வைத்தார். இதன் போது சில முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன… பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டங்களில் உத்தியோக பூர்வமாக கலந்து கொள்ளல். பிரதேச சம்மேளன […]

News

சம்மாந்துறை மக்களின் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்மியத்துல் உலமா சபை, மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை, சமூக சேவை அமைப்புக்கள், அதன் சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் கூட்டாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு செய்ததிருந்தனர். பர்மா அரசினால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் இன படுகொலைகளை கண்டித்து முப்பெரும் சபைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து வெள்ளிக்கிழமை (08.09.2017) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து கண்டன […]

News

சம்மாந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானம்

பர்மா அரசினால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்படும் இன படுகொலைகளை கண்டித்து முப்பெரும் சபைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து எதிர் வரும் வெள்ளிக்கிழமை (08.09.2017) ஜூம்மா தொழுகையை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்த தீர்மானித்துள்ளது. எனவே சமூக உணர்வுள்ள அனைத்து மக்களும் கண்டிப்பாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். மேலும் சகல சமூக சேவை அமைப்புக்களும் உங்களது கண்டன பதாதைகளை கொண்டு வருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் சகல அமைப்புக்களும் உங்களது கண்டன அறிக்கையினை அன்றைய தினம் […]

News

சில சுய நல ஊடகங்களின் பொய் பிரச்சாரம்

சம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த 11ம் திகதி உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் முஸ்லீம் மாணவி ஒ௫வர் பர்தாவுக்குள் புளூ டூத் ஹேன் செட்டை மறைத்து வைத்துக் கொண்டு பரீட்சை எழுதுகையில் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று பிரபல இணைய ஊடகங்களில் நேற்று வெளியான செய்தி தொடர்பாக சம்மாந்துறைப் பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் இச்செய்தின் உண்மைத்தன்யை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது. அதன் பிரகாரம் இந்த செய்தியில் எந்தவிதமான உண்மையுமில்லை என சம்மாந்துறை பொலிஸ் […]

News

சமூக சேவை அமைப்புகளுடனான சந்திப்பு

சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் எற்பாட்டில் சமூக சேவை அமைப்புகளுடனான சந்திப்பு இன்று (04.06.17) தாறுஸ்ஸலாம் வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக இடம் பெற்றது … இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட 130 அமைப்புகளில் 118 பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை அலங்கரிக்கும் வகையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் Mr. SLM. ஹனிபா வரவேற்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். மேலும் புதிய அங்கத்தவர்களுக்கு ??அமைப்பின் நோக்கம் அமைப்பின் கட்டமைப்பு ??சமுக சேவை அமைப்புகளின் இயலுமை விருத்தி தொடர்பான […]