சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் இவ்வருட ஆரம்பத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ITF அமைப்பு, சம்மேளனம், கணவந்தர்களின் நிதியுதவியுடன் கடந்த 2018.08.24 ம் திகதி அதன் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மேளனத்தின் தலைவர் A.J. காமில் இம்டாட், அதன் உப தலைவர் A.L.M. யாசீன், சம்மேளனத்தின் வாழ்வாதார குழு தலைவர் M.M.I. சியாத், சம்மேளனத்தின் சிறுவர் அபிவிருத்தி குழு தலைவர் M.M. வாகிட், அதன் செயலாளர் M.I.M. முபாறக், மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய தலைவர் இது சம்மேளனத்தின் வீட்டுத்திட்ட ஆரம்ப புள்ளி எனவும் இன்ஷாஅல்லாஹ் எதிர்காலங்களில் சமூக அமைப்புகள், கணவந்தர்களின் ஒத்துளைப்போடு இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற சம்மேளனம் தயாராக உள்ளது எனவும் தெரிவிதார்.
குறிப்பு : சம்மேளத்தினால் முன்னெடுக்கப்படும் வறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற சகல சமூக சேவை அமைப்புக்கள் கணவந்தர்களையும் சம்மேளனம் அன்புடன் அழைக்கின்றது,
தொடர்புகளுக்கு :
1. 0777565619
2. சம்மேளனத்தின் வாழ்வாதார குழு தலைவர் சியாத் – 773741297
3. www.sammanthurai.org