Health Development

சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் இரண்டாவது அமர்வு

சம்மாந்துறையின் சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் இரண்டாவது ஒன்று கூடல் இன்று (28/04/2018)  காலை 9.30 மணியளவில் சம்மாந்துறை Olive Restaurant ல் சுகாதாரப் பிரிவின் தலைவர் Dr.Rizwan தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் Kamil Imdad கலந்து கொண்டார்கள்.

மார்க்க அனுஷ்டானங்களுடன் ஒன்று கூடல் ஆரம்பிக்கப்பட்டு வரவேற்புரையுடன் தலைமையுரையை சுகாதாரப் பிரிவின் தலைவர் Dr Rizwan நிகழ்தினார்.

அவர் கூறுகையில் மக்கள் சுகாதாரம் சம்மந்தமாக நிறைய தப்பான அபிப்பிராயங்களை வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இவற்றை நாம் எவ்வாறு தெளிவு படுத்தலாம் என்பதில் செயற்பட வேண்டும். இதற்காக நாம் ஒவ்வொருவரும் நாம் இருக்கும் சமூக சேவை அமைப்புகளில் சம்மேளனத்தைப் பற்றியும் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவைப் பற்றியும் அறிமுகம் செய்வதோடு நமதூரிலே காணப்படும் அனைத்து சமூக சேவை அமைப்புகளையும் நமதூரின் சுகாதார மேம்பாட்டிற்காக சேவை செய்ய வைக்க வேண்டும்.

மேலும் குறிப்பிடுகையில் நாம் ஒவ்வொருத்தரும் நமதூரின் சுகாதாரம் சம்பந்தமான பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றின் தீர்வுகளை செயற்படுத்த முயற்சி செய்தல் வேண்டும்.  இதற்கான உந்துகோலாக நமது சுகாதார WhatsApp செயலியையும் பயன்படுத்தலாம். சிறு திட்டங்களை ஆரம்பித்து அவற்றை சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும் எனவும் பிராதித்து இறுதியாக கூட்டங்களுக்கு வருகின்றவர்கள் தவறாதும் வராதவர்களை வரவைக்குமாறும் வேண்டியவராக தனது உரைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அடுத்ததாக சம்மேளனத் தலைவர் கௌரவ Kamil Imdad அவர்கள் அனைவரையும் விழித்தவராக பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று தனது உரையை ஆரம்பித்தார். சம்மேளம் என்றால் என்ன அதன் வரலாறு,  செயற்பாடுகளை விளக்கியவராக சுகாதாரப் பிரிவானது திறம்பட இயங்க வேண்டுமென்று தூண்டியவராக இன்று வருகை தந்த உறுப்பினர்களின் சந்தேகங்களை அழகிய முறையிலும் தீர்த்து வைத்தார்.

முதலில் செய்ய வேண்டிய விடயத்தை இறுதியாக செய்தார் நமது செயலாளர் Aski அவர்கள். அதாவது கடந்த கன்னி கூட்டத்தின் (24/03/3018) கூட்டறிக்கையை வாசித்து முன் மொழிவுகளையும் வழிமொழிகளையும் பெற்றுக் கொண்டார்.

இறுதியாக செயலாளர் Aski இனால் நன்றி உரையாற்றப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *