Healthcare

சக்கரை வியாதி உடையவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது…

சக்கரை வியாதி (சீனி வருத்தம்) உடையவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது (பொதுவாக) நோவு இருக்காது,
Silent MI – இதை வலியில்லாத மாரடைப்பு என்பர்

சக்கரை நோயுடைய (சீனி வருத்தம்) ஒருவர்;

• தீடீர் என மயங்கி விழுதல்
• உடம்பு குளிராகி மயங்கிய நிலையில் இருத்தல்.
• உடல் குளிராகி வியர்த்து சோர்ந்து போதல்
• காலையில் கண் முழிக்கவில்லை ஆனால் சுவாசிக்கின்றார்

என இருக்கும் போது இது என்ன காரணமாக இருக்கும் என்றும் அவசரமாக என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றேன்.

சீனி வருத்தம் (Diabetes mellitus) உள்ளவர்களுக்கு ஏற்படும் சடுதியான பக்கவிளைவில் மிகவும் ஆபத்தானது இரத்தத்தில் சீனி அளவு குறைந்து மயக்க நிலையை அடைவதாகும் – Hypoglycaemic attack,

மேலே கூறப்பட்ட சந்தர்ப்பங்களின் போது உங்களுடைய வீட்டில் Glucometer இருப்பின் உடனடியாக சீனி பார்க்க வேண்டும். சீனி 48 mg/dl யை விடக் குறைவாகக் காட்டும் போது ( சிலருக்கு 60mg ,70mg என்று காணப்படும் போது மயக்கமாதிரி வரும்) அந்நோயாளி வாயினால் குடிக்குமளவிற்கு சுயநினைவுடன் இருப்பின் இனிப்புப் பண்டங்கள், சீனி சேர்க்கப்பட்ட தேனீர் அல்லது சீனி சேர்க்கப்பட்ட பாலை உடனடியாகக் கொடுக்க வேண்டும். அவர் வாயினால்
குடிக்க முடியாமலிருப்பின் ஊசி மூலமே டெக்ஸ்ரோசுவை வழங்க வேண்டும். எனவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைக்கு நேரம் தாமதிக்காது கொண்டு செல்லவேண்டும்.

மேற்கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் சீனி பார்த்த போது அது Normal என்றால் உங்களுக்கு முதலில் ஞாபகத்துக்கு வர வேண்டியது வலியில்லாத மாரடைப்பு , Silent MI. ஆகவே உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்.

மேலும் சீனி பார்ப்பதற்கு Glucometer இல்லை என்றாலும் உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

சாராம்சம்

சீனி வருத்தம் உடையவர்கள் வியர்த்து உடல் குளிர்ந்து மயங்கினாலோ, இயலாமல் இருந்தாலோ, சுவாசிக்கின்றார்கள் ஆனால் கண்முழிக்கவில்லை என்றாலோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்.

மக்களின் விழிப்புணர்வுக்காக இலகுவான முறையில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது. எனவே உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.


Dr. ILM Rizwan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *