News

சில சுய நல ஊடகங்களின் பொய் பிரச்சாரம்

சம்மாந்துறைப் பிரதேசத்தில் கடந்த 11ம் திகதி உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் முஸ்லீம் மாணவி ஒ௫வர் பர்தாவுக்குள் புளூ டூத் ஹேன் செட்டை மறைத்து வைத்துக் கொண்டு பரீட்சை எழுதுகையில் கையும் மெய்யுமாக பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று பிரபல இணைய ஊடகங்களில் நேற்று வெளியான செய்தி தொடர்பாக சம்மாந்துறைப் பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் இச்செய்தின் உண்மைத்தன்யை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்தது.

அதன் பிரகாரம் இந்த செய்தியில் எந்தவிதமான உண்மையுமில்லை என சம்மாந்துறை பொலிஸ் நிலையம் மற்றும் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் என்பன உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லாத பொறுப்புணர்ச்சியற்ற செய்தியினை வெளியிட்டமைக்காக அந்நிறுவனங்களுக்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனம் வன்மையான கண்டனத்தை,எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஒ௫ சமூகத்தை அவமதிக்கும் வகையில் ஊடக தர்மத்தை உதாசீனம் செய்து உண்மையில்லாத பொய்யான அபாண்டமான செய்தியினைவெளியுடும் கீழ்தரமான பொறுப்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்பதோடு குறித்த நிறுவனங்களுக்கு எதிராக எமது சம்மேளனம் சட்ட நடவடிக்கை எடுக்க இ௫ப்பதாகவும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இடம்மெறவில்லை என பிரதிக்கல்விப் பணிப்பாளரால் உறுதிப்படுந்தப்பட்ட கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

மதங்களை இழிவு படுத்தும் நோக்கோடும் இனக்களுக்கிடையே பிரிவினையை வளர்க்கும் சில சுய நல ஊடகங்களின் பொய் பிரச்சாரத்தினை சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கின்றது !!!

ஏ.ஜே.எம்.ஹனீபா – ஜே.பி
பொதுச்செயலாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *