திருமணமான பெண்களுக்கு…
அடிவயிறு நோவுது,
சலம் எரியுது,
சலம் போய் முடியும் போது கடுக்குது,
சலம் சொட்டு சொட்டாக போகின்றது,
அடிக்கடி சலம் போதல்,
சலம் சிவப்பு நிறமாக போகின்றது,
நடுக்கத்துடன் காய்ச்சல்.
என்றெல்லாம் பல பிரச்சினைகள் பொதுவாக வருவதற்குக் காரணம் சிறு நீர் கிருமித் தொத்தாகும். இதை உருவாக்கும் காரணங்கள் பலவாக இருந்தாலும் ஆலோசனைக்காக பிரதான ஒரு விடயத்தை இங்கே முன்வைக்கின்றேன்.
ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் சிறு நீர் பிரச்சினைகள் வருவதற்குக் காரணம் அவர்களின் சிறு நீரகத் தொகுதியின் வெளிப்புறக் கட்டமைப்பே ஆகும். சிறு நீர் பை யானது கருப்பைக்கு முன்புறமாகவும் சீறு நீர் வெளியேறும் துவாரமானது (Urethra) பெண் குறிக்கு மேலாகவும் அமைந்து காணப்டுவது மட்டுமன்றி நீளத்தில் சிறிதாகவும் சிறு நீர்ப்பையுடன் நேரடியாக தொடர்பு பட்டும் காணப்படுகின்றது.மேலும் இத்துவாரமானது கிளிட்டோரிஸ் எனும் உறுப்பிற்கும் பெண்குறியின் துவாரத்திற்கும் (யோனி வழியிற்கும்) இடையே அமைந்து காணப்படுகின்றது.
சிறுநீர்ப்பையில் காணப்படும் சிறு நீர் ஆனது கிருமிகளற்று சுத்தமானது. ஆனால் கிருமிகள் சிறு வழியினூடாக சென்றால் இலகுவாக கிருமித் தொதத்துக்குள்ளாகக் கூடியது.
அத்துடன் பெண் உறுப்பைச் சூழ உள்ள பகுதிகளில் சாதாரணமான நோயை ஏற்படுத்தாத நூண்ணங்கிகள் நோயை ஏற்படுத்தும் நுண்ணங்கிகள் தங்குவதற்கு இடம் வழங்காது பாதுகாப்பை வழங்கி வாழ்கின்றன.
E-Coli என்ற நுண்ணங்கியானது பெரும்பாலும் உடம்பிலே நோய் ஏற்படுத்தாத பொதுவான நுண்ணங்கியாக காணப்படும் வேளையில் அதன் ஒரு இனமே 90% மான சிறுநீர் தொத்துக்குக் காரணமாகக் காணப்படுகின்றது.
Honeymoon cystitis என்றால் தேன்நிலவு க்குப்பின் வரும் சிறுநீர்ப்பை கிருமித் தொத்தாகும்.
எனினும் இப்பிரச்சினை தேன்நிலவைக் கொண்டாடும் தம்பதியினருக்கு மட்டும் வரும் பிரச்சினை இல்லை, எல்லாத் தம்பதியினருக்கும் எல்லாக் காலங்களிலும் வரக்கூடிய பிரச்சினையாகும்.
உடலுறவு கொள்ளும் போது பெண்கள் சிறு நீரை அடக்கி வைப்பதனாலும் உடலுறவின் பின் சிறுநீர்கழித்து சுத்தம் செய்யாமல் பல மணி நேரங்கள் உறங்குவதுமாகும். அதாவது உடலுறவு கொள்ளும் போது பெண்களின் யோனியிலிருந்து சுரக்கப்படும் திரவமானது யோனிப்பகுதியில் பரவிக்காணப்படுகின்றது. இத்திரவமானது நோய் தொத்தை ஏற்படுத்தும் நுண்ணங்கிகளுக்கு நல்ல போசாக்கான ஊடகமாகவும் காணப்படுகின்றது. எனவே மிக நீண்ட நேரம் இத்திரவம் சுத்தப்படுத்தாமல் காணப்படும் போது (காலையில் எழும்பி சுத்தம் செய்வது) இதில் கலந்து காணப்படும் கிருமிகள் சிறு நீர்வழித்துவாரத்தினூடாக சிறு நீப்பையை அடைந்து சிறு நீர்த்தொத்தை உருவாக்கி சிறு நீர்ப்பையையே கிருமித் தொத்துக்குள்ளாக்குகின்றது. இவ்விடத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிடின் சிறு நீர்க் குழாயினூடாக (Ureter) சிறு நீரகத்துக்கு கிருமித் தொத்து செல்லும் வாய்ப்பு உள்ளது. இதன் போது இடுப்பு வலியுடன் நடுக்கத்துடன் கடும் காய்ச்சல் ஏற்படும் (Pyelonephritis).
எனவே உடலுறவு கொள்ள முன் சிறு நீர் கழித்து சிறு நீர்ப்பையை வெறுமையாக்குவதினாலும் உடலுறவு கொண்ட பின் உடனடியாக சிறு நீர் கழித்து சுத்தம் செய்வதனாலும் இக் கிருமிகளால் சிறு நீர்த் தொத்துக்குள்ளாவதைத் தடுக்கலாம்.
இதைத் தான் இஸ்லாம் தொடக்கை எவ்வாறு சுத்தம் செய்வது குளிப்பது என்று அழகிய முறையில் சொல்லித்தருகின்றது.
மேலும் பெண்களுக்கு சிறு நீரகத் தொத்து வரும் சந்தர்ப்பங்கள் சிலதையும் இங்கு தருகின்றேன்.
1) பெண்களின் சிறு நீர்ப்பை ஆண்களை விடப் பெரிது என்பதால் அதிக நேரம் சிறு நீர் கழிக்காது அடக்கி வைத்திருத்தல்.
2) மாதவிடாய் காலங்கள்
3 ) கர்ப்பிணி காலங்கள்.
4) சிறு நீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை…
சாராம்சம்
உடலுறவு கொள்ளுமுன்பும் உடலுறவு கொண்ட பின்பும் உடனடியாக சிறு நீர் கழித்து சுத்தம் செய்யுங்கள்.
## உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe பன்னாம அல்லாஹ்வின் திருப்பொருத்தம் கிடைக்க வேண்டுமென துஆ செய்யுங்கள் ##
✍
Dr ILM Rizwan